தமிழ் சினிமாவில் எப்படி நடிகர் விஜய்யோ, அதே போல அவருக்கு இணையானவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த மகேஷ்பாபு. குறிப்பாக மகேஷ் பாபுவின் பல படங்களை தமிழில் ரீமேக் செய்து மிகப்பெரிய வெற்றிகளை விஜய் பெற்றுள்ளார். அதனாலேயே இவர்கள் படங்கள் வெளியாகும் போது ஒருவருக்கு ஒருவர் ரசிகர்கள் ஒப்பீடு செய்வது வழக்கம்.
விஜயின் மகன் படிப்பை முடித்துவிட்டு தற்போது சினிமாவில் படம் இயக்கும் அளவிற்கு வந்து விட்டார். லைக்கா நிறுவனத்தில் அவர் படம் இயக்குகிறார். ஆனால் இதுவரை விஜய் தனது மகனுக்கு ஒரு வாழ்த்து சொன்னதாக கூட செய்தி வெளியாகவில்லை. இருவரும் அதன் பிறகு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை.
அதே சமயம் நடிகர் மகேஷ்பாபு தான் எங்கே சென்றாலும் தனது மகன், மகளை கூடவே அழைத்துச் செல்கிறார். அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அவற்றை சோசியல் மீடியாவில் தயக்கம் இல்லாமல் வெளியிடுகிறார்.
சமீபத்தில் அமெரிக்காவில் படித்த அவரது மகன் பிளஸ் டூ படிப்பை முடித்துவிட்டார். அவருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்ட மகேஷ் பாபு மகனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது, “நீ திறமையானவன் என்பது தெரியும். இதையும் விட அதிகம் சாதிப்பாய். உன் கனவுகளை துரத்திச் செல்” என்று உற்சாகப்படுத்தி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ஆனால் நடிகர் விஜய்யோ தன் மகனுக்கு இது போன்ற உற்சாக வார்த்தைகள் கூறியதாக பொதுவெளியில் எதுவும் வெளியாகவே இல்லை. மகன் மீது ஏன் இந்த பாராமுகம் காட்டுகிறார் விஜய் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.