மிகப்பெரிய ஒரு பாம் பிளாஸ்டில் யூடியூப் சேனல் நடத்தி வரும் வசந்த் ரவி அதிலிருந்து தப்பிக்கும்போது தேசிய பாதுகாப்பு படை மூலம் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. அவர் ஒரு தீவிரவாதியாக கருதப்பட்டு முகமூடி அணிந்த ஒருவர் அவரிடம் விசாரணை நடத்த நான் யூடியூப் சேனலுக்காக தேவையான கன்டென்ட் க்காக தான் அங்கு சென்றேன் என்று கூற அதை நம்ப மறுக்கும் விசாரணை அதிகாரி அவரிடம் உடைந்து குடைந்து விசாரணை நடத்த பல நம்ப முடியாத சம்பவங்களும் திடுக்கிடும் உண்மைகளும் வெளிப்படுகின்றன. அதுதான் வெப்பன் படத்தின் கதைகளம்.
படத்தின் துவக்கத்தில் ஹிட்லர் காலத்தில் ஆரம்பித்து அங்கு திருடப்பட்ட அதிசய சக்தி வாய்ந்த மருந்து. அந்த மருந்து செலுத்தப்பட்ட ஒருவன் அவனுக்கு பிறக்கும் இரு மகன்கள் தீ விபத்தில் குடும்பம் பிரிய நேர்கிறது. ஒவ்வொருவரும் சந்தித்துக் கொள்ளும் போது நமக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகிறது. அமானுஷ்ய சக்தி கொண்ட சத்யராஜ், அவருக்கு மகனாக பிறக்கும் வசந்த் ரவி அவருக்கும் அவரின் சக்தி ஏதோ விட்டலாச்சாரியார் படம் பார்த்தது போல் நமக்கு ஒரு பிரம்மை.
நாளைய மனிதன் என்று ஒரு படம் 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து இறந்த மனிதனுக்கு ஒரு சாகா மருந்தை செலுத்தி அவன் செய்யும் அட்டூழியங்கள் அவனை சாகடிக்க முடியாமல் அவதிப்படும் காவல்துறை அதேபோல் இந்தப் படத்தை கொஞ்சம் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றது போல் மாற்றி அமைத்து நமக்கு தந்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நல்ல விஷயம் என்னவென்றால் சுற்றுச்சூழலை பாதுகாக்க நிழல் உலகில் நாட்டை கைக்குள் வைத்திருக்கும் ஒரு 12 பெரிய மனிதர்களை பழிவாங்கும் படலமாக கதாநாயகன் களம் இறங்கி இருப்பதால் நமக்கு ஒரு ஆறுதல்.
வெப்பன் நம்ப முடியாத விஷயத்தை நம்பும்படியாக எடுத்து நம்மை நம்ப வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். இதில் இரண்டாம் பாகம் வேறு..