spot_img
HomeNews‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது

உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி ஆகியோரின் பான் இந்தியன் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது!

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றிப் படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்துடன் வருகிறார்கள். இந்தப் படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சுதந்திர தினம் படம் ரிலீஸுக்கு சரியான நேரம் என்று படக்குழுவினர் கருதுகின்றனர். ஏனெனில், ஆகஸ்ட் 15 வியாழன் அன்று விடுமுறையைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ரக்க்ஷா பந்தன்) மற்றொரு விடுமுறையும் வருவதால் மக்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுத்து, படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்யும் என்கின்றனர் படக்குழுவினர். இந்த ரிலீஸ் தேதியில் ராம் நெற்றி நிறைய விபூதியோடு பின்னணியில் ஒரு சிவலிங்கம் மற்றும் ஒரு சுடருடன் போஸ்டரில் இருக்கிறார். டீசரைத் தொடர்ந்து அடுத்தடுத்து படம் குறித்தான அப்டேட்டும் சீக்கிரம் கொடுக்க இருக்கிறார்கள்.

’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ப்ரீக்குவலை விட ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் டபுளாக பார்வையாளர்களுக்கு இதில் இருக்கும். இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் தனது ஹீரோவை சிறந்த ஸ்டைலான, மாஸ் மற்றும் அதிரடியான அவதாரத்தில் திரையில் காட்ட இருக்கிறார். ஹீரோ ராமும் இந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் சிறப்பாக கொடுத்துள்ளார். நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்க, ராமுக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மணி ஷர்மா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். இந்தப் படத்தை பூரி கனெக்ட்ஸ் பேனரில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும்.

நடிகர்கள்: ராம் பொதினேனி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர், அலி, கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர், இயக்குநர்: பூரி ஜெகன்நாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகநாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
சிஇஓ: விசு ரெட்டி,
இசை: மணி ஷர்மா,
ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி,
ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img