spot_img
HomeCinema Reviewபயமறியா பிரம்மை - விமர்சனம்

பயமறியா பிரம்மை – விமர்சனம்

புதிய முயற்சியில் புதிய கோணத்தில் வெளிவந்திருக்கும் படம் பயமறியா பிரம்மை. கண்ணாடி முன்னாடி நின்றால் நம் முகம் காட்டுவது போல் நாவலை படிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த நாவலின் நாயகனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதை சொல்லி இருக்கும் படம் பயமறியா பிரம்மை.

சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையை புத்தமாக எழுதுவதற்காக எழுத்தாளர் கபிலன் அவரை சிறையில் சந்திக்கிறார். இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கபிலன் சொல்கிறார். அது எப்படி நடக்கும்? என்று ஜெகதீஷ் கேட்கிறார். ஜெகதீஷின் கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக விவரிப்பது தான் ‘பயமறியா பிரம்மை’.

படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஜெகதீஷ் என்றாலும், ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜெகதீஷ் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்கள். இந்த ஆறு பேரும் ஜெகதீஷ் என்ற கதபாத்திரத்தின் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை திரையில் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலனாக நடித்திருக்கும் வினோத் சாகர், ஜெகதீஷின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது வேலை என்னவென்று தெரியவில்லை என்றாலும், இயக்குநர் சொன்னதை கேட்டு அப்படியே நடித்திருக்கிறார்கள்

புதிய கோணத்தில் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் புதிதான கதையை எடுத்து புரியும்படி சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு கொலையை, கொலைகாரனை கொலை செய்வது ஒரு கலை. அந்த கலைக்கு ஒரு கொலை.

அப்பப்பா நம்மளை கொலை செய்து விடுகிறார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img