spot_img
HomeCinema Reviewகல்கி 2898 கிபி - விமர்சனம்

கல்கி 2898 கிபி – விமர்சனம்

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என முன்னணி நட்சத்திரங்கள் படை சூழ வெளி வந்திருக்கும் படம் கல்கி 2898 கிபி. நம் எதிர்காலத்தில் நடக்கும் சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்கள், நம் பிந்திய காலத்தில் மகாபாரதம் எனும் மிகப்பெரிய இதிகாசத்தை படித்திருப்போம்.. படமாக பார்த்திருப்போம்.. அந்த மகாபாரதம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை சொல்வதை இப்படத்தின் கதை.

மகாபாரதம் யுத்தத்தின் முடிவில் தொடங்கும் கதை, பல நூறு ஆண்டுகள் கடந்து நவீன உலகில் பல போர்களையும், அழிவுகளையும் தாண்டி கி.பி 2898 ஆம் ஆண்டு அதிநவீன காலக்கட்டத்தில் பயணிக்கிறது. மகாபாரதம் கதை தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த படத்தின் கதை ஓரளவு புரியும் என்பதால், மகாபாரதம் கதையை படித்துவிட்டு படம் பார்ப்பது நல்லது.

படத்தில் நாயகன் அந்தஸ்த்தில் பிரபாஸ் நடித்திருந்தாலும், அவர் ஒரு சாதாரண கதாபாத்திரமாகவே வலம் வருகிறார். அதிலும், அவரது அறிமுக காட்சியும், அதையொட்டி வரும் சண்டைக்காட்சியும் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு வெற்றி படம் அமையாதது, அவரது ரசிகர்களை கவலைக்கொள்ள செய்திருக்கும் நிலையில், இந்த படத்தில் அவருக்காக நல்ல காட்சி கூட அமையாதது பெரும் சோகம்.

சுப்ரீம் யாஷின் என்ற வில்லன் வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். 200 ஆண்டுகளாக வாழும் அவரது கதாபாத்திர வடிவமைப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனால், அது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்பதால் கமல்ஹாசனை பார்க்க முடியவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவரது ஆட்டம் அதிரடியாக இருக்கும் என்பதை கிளைமாக்ஸ் காட்சி உணர்த்துகிறது.

தெய்வ குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே, அஸ்வத்தாமாவாக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோருடன் இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா,  துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் DJORDJE STOJILJKOVIC பணியை விட விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் தான் படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறது என்றாலும், ஒளிப்பதிவாளரின் பணியும் பாராட்டும்படி இருக்கிறது.

சந்தோஷ் நாராயணின் இசை படத்தின் பிரமாண்டத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் முதல் பாதியில் சற்று தடுமாறியிருந்தாலும், இரண்டாம் பாதியில் வேகமாகவும், நேர்த்தியாகவும் காட்சிகளை தொகுத்து படத்திற்கு சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார்

ஹாலிவுட்டுக்கு இணையாக படம் எடுத்திருக்கும் இயக்குனர் அதில் ஜெயித்திருந்தாலும் திரைக்கதையில் தோற்று விட்டார். ஒரு மிகப்பெரிய கதாநாயகனின் அறிமுகம் நகைச்சுவையாக இருக்கும் இடம் என்பதற்காக மிக மிக மோசமான காட்சி அமைப்பு. படம் முழுவதும் அடிமைத்தனம் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு சாம்பல் நிற கலரிங் படம் முழுக்க நிறைந்து இருக்கிறது. இது படம் பார்க்கும் நம்மை ஒரு வித இருட்டுக்குள் கொண்டு செல்வது போல் இருக்கிறது. ஒரே ஒரு காட்சியில் பசுமையாக காட்டியிருக்கிறார்கள். அந்த காட்சி கண்ணுக்கு குழுமை. வில்லனாக கமலஹாசனுக்கு காட்சிகள் இரண்டு. பாகம் இரண்டில் அவருக்கு வேலை அதிகமாக இருக்கும் போலிருக்கிறது.

 

பல நூறு கோடி செலவு செய்து பயனற்று போன கல்கி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img