spot_img
HomeCinema Reviewஇந்தியன் 2 விமர்சனம்

இந்தியன் 2 விமர்சனம்

 

கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவி வெளியிட்டில் வந்திருக்கும் படம் இந்தியன் 2

இந்தியன் படத்தின் கதை என்ன என்பது நாம் படம் பார்த்து தெரிந்து இருப்போம்

ஆனால் இந்தியன் 2 என்றால் அதே போல் வேறு லஞ்சு விஷயம்தான் என்று படம் பார்க்கும் போகும்போது நாம் எண்ணத்தில் ஓடும் ஆனால் இந்த இந்தியன் 2 வில் அப்படி என்ன புதுமைகள் இருக்கின்றன என்ற மன ஓட்டத்தில் தான் படம் பார்க்கும் போகும் ரசிகன் ஒவ்வொருத்தரின் கேள்வி அந்தக் கேள்விக்கு இந்தியன் 2 வில் பதில் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது

படத்தைக் காண போகும் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பரிபூரணமாக நிறைவேற்றி வெளியே வந்திருக்கிறது இந்தியன் 2

சித்தார்த் மற்றும் நண்பர்கள் ஒரு யூட்யூப் சேனல் வைத்து சமுதாயத்தின் அவலங்களை மக்கள் முன் பிரதிபலிக்கின்றார்கள்

ஆனாலும் அவர்கள் வெளியிடும் வீடியோவில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை காரணம் லஞ்சம்

குற்றவாளிகள் லஞ்சத்தை மூலதனமாக வைத்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கின்றனர்

இவர்களை யார் தட்டி கேட்பது என்று சித்தார்த் தன் நண்பர்களுடன் விவாதிக்கும் போது இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியா வந்தால்தான் இந்த லஞ்சத்தை ஒழிக்க முடியும் நாட்டை சீர்படுத்த முடியும் என்று முடிவெடுத்து சோசியல் மீடியா மூலம் இந்தியன் தாத்தாவை வரவழைக்கின்றனர்

தைவானில் வர்மக்கலை பள்ளி நடத்தும் இந்தியன் தாத்தா ஒரு சீன பயணி போல் இந்தியா வருகிறார் அவரை பிடிக்க சிபிஐ ஆபிசர் பாபி சிம்ஹா ஏர்போர்ட்டில் இந்தியன் தாத்தாவை கைது செய்ய தப்பித்து செல்கிறார் இந்தியன் தாத்தா

லஞ்ச லாவண்யத்தில் உருளும் பண முதலைகளை பந்தாடுகிறார் இந்தியன் தாத்தா

அவரை பிடிக்க பாடுபடும் பாபி சிம்கா இறுதியில் என்ன

அது இந்தியன் மூன்றில் காணலாம்

சங்கர் என்றால் பிரம்மாண்டம் பிரம்மாண்டத்தின் மறுபெயர் சங்கர் அது இந்தியன் 2 வில் பளிச்சென்று தெரிகிறது

நட்சத்திர பட்டாளங்கள் மற்றும் பிரம்மிக்க வைக்கும் செட்

உதாரணத்திற்கு தங்கத்திலான ஒரு பங்களா பாத்ரூம் லெட்டின் கூட தங்கம் அதைப் பார்க்கும் நமக்கு பிரமிப்புடன் ஆச்சரியம் படம் முழுக்க இந்த பங்களாவில் எடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்று என்ன ஓட்டங்கள் ஓடுகின்றன

ஆனால் கதைக்களம் வேறு அல்லவா

இந்த முறை வர்மக்கலையில் ஒவ்வொரு பாடம் முறையாக ஊழல்வாதிகளை சாகடிக்கிறார் இந்தியன் தாத்தா

விண்வெளிக்கு இடம் வாங்கி வசிக்க செல்லும் கோடீஸ்வரன் விண்வெளியில் இருந்தால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக பறந்து பறந்து பயிற்சி எடுக்கும் போது அவரை பறந்து பறந்து சாகடிக்கிறார் இந்தியன் தாத்தா

படத்தின் முதல் கொலை ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு பாடல்
ஆஹா
ஆஹா

வானமும் கடலும் ஒன்றிணைந்த இடத்தில் இந்திரலோகத்தில் அழகிகள் போல் நடனமாடும் மாந்தரை பார்த்தால் மது குடிக்காமலே போதை ஏற்றம்

அந்த அளவுக்கு இருக்கிறது அந்தப் பாடலும் பாடலுக்கு நடனமும்

அனிருத்துக்கு ஒரு

போடுவோம்

அந்த ஊழல் முதலையை கொலை செய்யும் போது பஞ்சனையில் பாவைகளை கொஞ்சும் நேரத்தில் வர்மக்கலை மூலம் அவரின் ஆண் தன்மையை பறித்து பெண்ணும் இல்லாமல் ஆணும் இல்லாமல் அவரை ஆக்கி கொலை செய்வது புதியது

சண்டை பயிற்சிகள் ஹாலிவுட்டுக்கு இணையாக எடுத்திருக்கிறார் சண்டை பயிற்சியாளர்

ஒரு டயரில் செல்லும் வாகனத்தை வைத்து இந்தியன் தாத்தா சென்னை முழுவதும் மெட்ரோ ட்ரெயின் உட்பட கலக்கு கலக்கு என்று கலக்குகிறார்

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் நம் வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற இந்தியன் தாத்தாவின் பேச்சு மூலம் இளைஞர்கள் தன் வீட்டில் நடக்கும் ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டும் வரும்போது அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் சித்தார்த்தின் தாய் தற்கொலை செய்ய

இந்தியன் தாத்தாவை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்ற இந்திய மக்கள்

கோ பேக்

இந்தியா என்ற வசனத்தை சோசியல் மீடியா மூலம் இந்தியன் தாத்தாவை விரட்டி அடிக்க முயற்சிக்கும் போது அவரை கைது செய்யும் பாபி சிம் கா நிலை என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

சமுத்திரகனி ரேணுகா இன்னும் பல நட்சத்திரங்களின் பங்களிப்பு சிறப்பு அந்த சிறப்பை நம் விமர்சித்தால் பக்கங்கள் பத்தாது

அனைத்து புகழும் இயக்குநருக்கு சொந்தம் ஆகிறது அதில் பங்கு போட்டுக்கொள்ள லைக்கா சுவாஸ்கரனுக்கு கண்டிப்பாக உரிமை இருக்கிறது

இந்தியன் 2 இந்தியன் மூன்று காக காத்திருக்கிறான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img