spot_img
HomeNewsவெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன் வழங்குகிறார்

வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன் வழங்குகிறார்

 

மண்சார்ந்த கதைகளை அர்ப்பணிப்போடு முழு இதயத்தோடும் படமாக்கும்போது அது எல்லைகளைத் தாண்டி பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். அதுபோன்ற ஒர் படமான ‘பராரி’யை (ஆங்கிலத்தில் ‘தி மைக்ரண்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது) இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்துள்ளார். 57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கல விருதைப் பெற்று பாராட்டுகள் வாங்கியுள்ளது.

இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ‘பராரி’ படக்குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ’ஜோக்கர்’, ‘குக்கூ’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜு முருகனிடம் உதவியாளராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.முத்துக்கனி (மேக்கப்), எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலிக்கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு), ஏ.ஆர். சுகுமாறன் பிஎஃப்ஏ (கலை), சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்), ஸ்ரீதர் (ஒளிப்பதிவு) மற்றும் சுரேஷ் சந்திரா & அப்துல் ஏ நாசர் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img