கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது, பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்.
சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது.
மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, அவரது நட்சத்திர பலத்திற்குச் சான்றாகும். சமீபத்தில் அவர் நடித்த “கல்கி” திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரே ஒரு விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போதிலும், திரைப்படம் மிகப்பெரிய அன்பையும் வரவேற்பையும் பெற்றது, நடிகரின் ஈடு இணையற்ற செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டும் அல்ல; பிரபாஸின் திரைப்படங்கள் ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது அவரது உலகளாவிய ஈர்ப்பைப் பிரதிபலிக்கிறது. , பிரபாஸின் ரசிகர்கள் பான் இந்தியா சூப்பர் ஸ்டாரை மீது மிகப்பெரும் அன்பு வைத்துள்ளனர். ஆதரவற்றவர்களுக்கு நன்கொடை அளிப்பது அல்லது நடிகரின் பிரம்மாண்ட கட் அவுட்களை உருவாக்குவது என அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான அவரது ‘கல்கி’ பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் 1100 கோடிகளை வசூலித்து ஒரு வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது, இது உலகளாவிய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த சாதனை நடிகர் பிரபாஸின் மகத்தான புகழையும், திரைப்படத் துறையில் தாக்கத்தையும் மேலும் பெருக்குகிறது. 500 கோடியைத் தாண்டிய தொடக்க வார இறுதி வசூல் மூலம், இந்தியத் திரையுலகில் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது ‘கல்கி’. இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலைத் தாண்டிய இரண்டு படங்களில் நடித்த இரண்டு நடிகர்களில் பிரபாஸ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது, அதில் “பாகுபலி 2” முதல் படமாகும்.
பிரபாஸின் பணிவு மற்றும் எளிமை அவரை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக மாற்றியுள்ளது. அவரது பார்வையாளர்களுடனான இந்த உண்மையான தொடர்பு அசைக்க முடியாத ஆதரவாக உள்ளது, இது அவரது ஒவ்வொரு பட வெளியீட்டையும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றுகிறது. “பாகுபலி” தொடரின் மகத்தான வெற்றியிலிருந்து “சாஹோ” மற்றும் “சலார்” போன்ற வெற்றிகள் வரை, பிரபாஸ் பாக்ஸ் ஆபிஸ் டைட்டன் என்ற நிலையை உறுதிப்படுத்தி, அடுத்தடுத்து பெரிய ப்ளாக்பஸ்டர்களை வழங்கியுள்ளார்.
பிரபாஸின் முதல் நாள் கலக்சனில் தொடர்ந்து சாதனை படைக்கும் திறன் ஈடு இணையற்றது. “பாகுபலி: தி பிகினிங்” முதல் நாள் வசூல் மூலம் ₹75 கோடிகள் வசூல் சாதனை படைத்தது, அதைத் தொடர்ந்து “பாகுபலி: தி கன்க்ளூஷன்” முதல் நாள் வசூல் ₹200 கோடியுடன் வசூலில் அசத்தியது. “சாஹோ” முதல் நாள் ₹130 கோடி வசூலுடன் இந்தப் போக்கைத் தொடர்ந்தது, மேலும் “சலார்” முதல் நாள் வசூல் ₹178 கோடிகளுடன் பிரபாஸின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியது. இப்போது, “கல்கி” திரைப்படம் அதன் முதல் நாள் வசூல் ₹180 கோடியுடன் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது, பிரபாஸ் இந்தியாவின் வலிமைமிகு நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.