spot_img
HomeNewsஅதிர வைக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் ட்ராக் வெளியானது

அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக் வெளியானது

 

பல மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான், ஒரு சாதாரண மனிதரான ‘லக்கி பாஸ்கரி’ன் அசாதாரண கதையுடன் இந்த முறை வருகிறார். ஜூலை 28ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

1980களின் பிற்பகுதிக்கும் 1990களின் முற்பகுதிக்கும் நம்மை அழைத்து செல்லும் இந்த இசை ரசிகர்களுக்கு போதை தருகிறது என்றால் மிகையில்லை. இசைக்கருவிகளின் பயன்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக, பழம்பெரும் பாடகி உஷா உதுப்பின் குரல் இந்த ட்ராக்கை ஒரு ராக்கிங் நாஸ்டால்ஜிக்காக மாற்றி இருக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், 1980களின் இண்டி-ராக்கை தற்போதைய தலைமுறை உணர்வுகளுடன் இணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளார். இந்த காலத்திற்கான புதிய டிராக் போல, மொழி தடைகளைக் கடந்து இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்களில் இந்த இசை இடம் பிடித்திருக்கிறது.

பிளாக்பஸ்டர் எழுத்தாளர்-இயக்குநர் வெங்கி அட்லூரி, மறக்கமுடியாத மற்றொரு வெற்றிப் படத்தை துல்கர் சல்மானுக்குக் கொடுக்க இருக்கிறார்.

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்கள். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வழங்குகிறது.

மூத்த புரொடக்ஷன் டிசைனர் வங்காளன், எண்பதுகளின் மும்பையை மீண்டும் கண் முன்னே உருவாக்கியுள்ளார். படத்திற்காக அவரது பணிக்கு விருதுகள் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி தனது ஒளிப்பதிவு மூலம் படத்திற்கு மேலும் அழகு சேர்த்து, இயக்குநரின் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ‘லக்கி பாஸ்கர்’ படம் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

தொழில்நுட்பக் குழு:

பாடல்: ‘லக்கி பாஸ்கர்’ டைட்டில் டிராக்/ பாடல்,
இசை: ஜிவி பிரகாஷ்,
பாடகி: உஷா உதுப்,
பாடல் வரிகள்: வானமலி,
பாலாஜி வேணு கோபால் (தமிழ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img