கூழாங்கல் படத்தின் வெற்றி இயக்குனரின் மற்றும் ஒரு படைப்பு ஜமா. ஜமா என்றால் என்ன ? ஜமா என்றால் குழு, ட்ரூப் என்று அர்த்தம்.
கதைக்களம் தெருக்கூத்து நடத்தும் குழுவின் நண்பர்கள் இருவர். அதில் ஒருவர் குழுவின் ஆசான். இன்னொருவர் ஆசனாக ஆசைப்ட்டு நண்பன் என்று பாராமல் அவரை விரட்டி அடித்து தான் குழுவின் ஆசான் ஆகிறார். தன் தந்தை நடத்திய தெருக்கூத்து குழுவை தான் நடத்த வேண்டும் என்ற வைராக்கியத்தில் ஆசானின் மகன் படத்தின் கதாநாயகன் அந்தக் குழுவில் பெண் வேடமிட்டு நடிக்கும் நடிகராக சேர்ந்து தெருக்கூத்து குழுவை தன் வசப்படுத்த முயற்சி எடுக்க அதற்கு ஏகப்பட்ட தடைகள். அந்த தடைகளை மீறி தெருக்கூத்து குழு நாயகன் தன் வசப்படுத்தினாரா என்பதே மீதிக்கதை.
எதிர் நாயகன் சேத்தன், இயக்குனர் கதாநாயகன் பாரி இளவழகன் இந்த இருவருமே படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். சேத்தன் இவர் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்தாலும் தமிழ் வெள்ளித்திரையில் அவ்வப்போது சில பாத்திரங்களில் தலை காட்டினாலும் இவருக்கு பேர் வாங்கி தந்தது இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படமே. அதற்குப் பிறகு மற்றும் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. ஜமா படம் தெருக்கூத்து கலைஞராக தன் கதாபாத்திரத்தை மிக அருமையாக வாழ்ந்திருக்கிறார். ஜமா ஆரம்பிக்க தன் மகளை பண்ணையில் வேலைக்கு விட்டு வரும் பணத்தில் நண்பனுடன் சேர்ந்து ஜமா ஆரம்பிப்பதிலும் பிறகு நண்பனை விரட்டி விட்டு தான் ஆசானாகவதும் என தன் பண்பாட்டு நடிப்பை வெளிப்படுத்தி ரசிகனின் கைத்தட்டலை பெறுகிறார்.
படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான பாரி இளவழகன். தெருக்கூத்து கலைஞர்களின் உடல் மொழிகளை தன் உடலுக்குள் செலுத்தி தெருக்கூத்து கலைஞனாக வாழ்வது மட்டுமல்லாமல் வெற்றியும் கண்டு இருக்கிறார். அவர் போடும் பெண் வேடத்திற்காக தன் இயல்பான வாழ்க்கையிலும் பெண்மையின் சாயலை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பில் சிறிது மாறுபட்டாலும் பார்ப்பவர்களுக்கு அவர் திருநங்கை போல் தெரிவார். ஆனால் தன் நடிப்பாற்றலால் மிக அழகாக லாவகமாக உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் ஒரு சிறந்த கதாநாயகனுக்கு உரிய அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தி இயக்குனராக மட்டுமல்ல ஒரு கதாநாயகனாகவும் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.
நாயகி அம்மு அபிராமி. படத்திற்கு ஒரு நாயகி தேவைப்படுவதால் இவர் இந்த படத்தில் வலம் வருகிறார். நாயகனை காதலிக்கிறார். சண்டை போடுகிறார். ஊரை விட்டு செல்கிறார். பிறகு வருகிறார். மற்ற கதாபாத்திரங்களும் தன் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து மிக அழகாக தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. பார்க்கும் ரசிகனுக்கு இவரிடமிருந்து எதிர்பார்ப்பு அதிகம். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றத்தை தந்திருக்கிறார். மறந்து போன இறந்து போன சினிமாவின் கொள்ளு தாத்தாவான தெருக்கூத்துக்கு உயிர் கொடுத்து சினிமா மூலம் வலம் வந்திருக்கும் ஜமாவுக்கு நம் போக்கஸ் ஒன் சினிமா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஏ.கே உசைன்