spot_img
HomeCinema Reviewமழை பிடிக்காத மனிதன் ; விமர்சனம்

மழை பிடிக்காத மனிதன் ; விமர்சனம்

இந்திய ராணுவத்தின் ரகசிய படையில் பணியாற்றும் விஜய் ஆண்டனி, உடன் பணியாற்றும் நண்பரின் தங்கையை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். அவரை கொலை செய்ய துரத்தும் முன்னாள் எதிரியின் தாக்குதலில் மனைவியோடு அவரும் இறந்து விட்டார் என்று நம்பப்படுகிறது.

ஆனால், உயிருக்கு போராடும் அவரை காப்பாற்றும் நண்பர், மீண்டும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி, இறந்தவர் இறந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்து, அவரை யாருக்கும் தெரியாமல் அந்தமானுக்கு அழைத்துச் செல்கிறார்.

புதிய இடத்திற்கு வரும் விஜய் ஆண்டனிக்கு புதிய உறவுகள் கிடைக்க, அவர்கள் மூலம் புதிய பிரச்சனைகளும் வருகிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து அவர் விடுபட்டாரா?, அவரை தேடும் எதிரிகளிடம் பிடிபட்டாரா? என்பதை விஜய் ஆண்டனியின் முந்தைய படத்தின் தொடர்ச்சியாக சொல்வதே ‘மழை பிடிக்காத மனிதன்’.

விஜய் ஆண்டனி என்றால் இப்படித்தான் நடிப்பார் என ஏற்கனவே ரிஜிஸ்டர் ஆகிவிட்டதால் அதை நாம் விமர்சிக்க தேவையில்லை. அதேசமயம் வழக்கம்போல் ஆக்‌ஷனில் அதிரடியையும், நடிப்பில் நிதானத்தையும் வெளிப்படுத்த தவறவும் இல்லை.

வில்லனாக நடித்திருக்கும் டாலி தனன்ஜெயா, போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் முரளி சர்மா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோரின் அனுபவமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

நாயகி மேகா ஆகாஷ் இருக்கிறார்.அவருக்கு முக்கியத்துவம் குறைவென்றாலும் அவர் இருப்பதே ஆறுதல் என்றிருக்கிறது. சரண்யாவின் மகனாக வரும் பிருத்வி அம்பர் நடிப்பில் துள்ள காட்டினாலும் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிடுகிறது.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் ஹாலிவுட் தரம். விஜய் ஆண்டனி மற்றும் ராய் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஒகே தான் என்றாலும் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.

இயக்குநர் விஜய் மில்டன், நாயகனுக்கு மழை பிடிக்காமல் போவதற்கான காரணமாக சொன்ன விசயத்தை தான் ஜீரணிக்க முடியவில்லை. ஆரம்பத்திலேயே விஜய் ஆண்டனி யார் என்கிற சஸ்பென்ஸ் உடைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பலவீனம். இருந்தாலும் ஆக்சன் காட்சிகளால் படத்தை ஓரளவு ரசிக்க வைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img