spot_img
HomeCinema Reviewவாஸ்கோடகாமா – விமர்சனம்

வாஸ்கோடகாமா – விமர்சனம்

கலியுக காலத்தின் முடிவில் நன்மை குறைந்து, தீமை அதிகரித்து வரும் உலகில், அநீதி மற்றும் துரோகத்தால்  கட்டமைக்கப்பட்ட உலகத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும், தீயவர்கள் ஆட்சி செய்யும் போது நல்லவர்கள் தண்டிக்கப்படுவதாக எதிர்காலத்தில் அமைந்தால் என்னவாகும் என்பதின் கற்பனை வடிவமே  ‘வாஸ்கோடகாமா”வின் முழுக்கதை.

பல யுகங்கள் கடந்தபின் நிகழும் கதைக்களம். இதில் தாதாவான ஆனந்த்ராஜ் மகள் அர்த்தனா ஒரு நல்ல மனிதனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் ​என்று கனவு காணும் பெண். ஆனால் தந்தை ஆனந்த் ராஜ் ஒரு அயோக்கியனை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அர்த்தனா உண்மையான நல்ல மனிதரான நகுலை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

இதனிடையே எதிர்பாராத சூழ்நிலையில் நகுல் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. மேலும் சிறைச் சுவர்களுக்குள் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான குழப்பமான சம்பவங்கள் நடக்க, நகுல் நல்லவராக இருந்து தீயவர்களிடமிருந்து அனைவரையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

இது முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் என்பதால் நகுலுக்கு அல்வா சாப்பிடுவது போல. படம் முழுவதும் திருதிருவென முழித்து முழித்து நடித்திருக்கிறார் நகுல்.திரைக்கதையும் அப்படியே இருப்பதால் அவர் நடிப்பும் மிகப் பொருத்தமாக இருக்கிறது. கதாநாயகி அர்த்தனா பினு – வழக்கம்போல தமிழ் திரைப்பட கதாநாயகியாக திரையில் தோன்றுகிறார் அவ்வளவுதான்.

வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், பிரேம்குமார், படவா கோபி, சேசு என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் என்.வி.அருணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு. ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

இதன் ஒருவரிக்கதையை வித்தியாசமாக யோசித்துவிட்டு, அதற்கான திரைக்கதையை சரியான திசையில்  நகர்த்த தெரியாமல் குழம்பி இருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜி.கே. உண்மையிலேயே இது வித்தியாசமான களம்தான். ஆனால், அதை லாஜிக்குடன் யோசித்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து காட்சிகள் உருவாக்கி இருந்தால் இந்தப் படம் குறிப்பிடத்தக்க ஒன்றாக மாறியிருக்கும். எந்த லாஜிக்கும் பார்க்காமல் வித்தியாசத்தை மட்டுமே எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு ஒருவேளை இந்தப் படம் பிடிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img