ஊட்டியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். இருவரும் நண்பனாக மாறும் தருணத்தில் வேன் விபத்தில் மற்ற மாணவர்களை காப்பாற்றி எதிரியாக இருந்த தன் நண்பனை காப்பாற்றி தன் உயிரை விட்டு விடுகிறான். அதை நேரில் பார்த்த நண்பன் துக்கம் தாங்காமல் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும்பொழுது நண்பனின் ஆசை இமயமலையில் பைக்கில் சுற்றிவர வேண்டும் என்pஅது தெரிய வருகிறது. இதற்காக ஓவியத்தை தன் லட்சியமாக கொண்ட நண்பன் அதை மறந்து நண்பனுக்காக என்ன செய்கிறான் என்பதே மீதி கதை.
சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் கிஷோர், பாரி முகிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரவ் காளை, பிரவீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில் மூன்று பேரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். பள்ளி பருவத்திலும் சரி, இளம் வயது பருவத்திலும் சரி இவர்களுடைய அளவான நடிப்பு ரசிகர்களை கவர்கிறது. குறிப்பாக இளம் வயது பருவத்தில் இடம்பெறும் பிரவீன் கிஷோர் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோரது பயணத்தின் வேகம் குறைவாக இருந்தாலும், இருவருடைய தேடல் காட்சிகளை ரசிக்க வைக்கிறது.
கதை சொல்லும் முறை, தொழில்நுட்ப ரீதியாக படத்தை உருவாக்கிய விதம் ஆகியவற்றுக்காக இயக்குநர் ஹலிதா சமீம் மற்றும் அவரது குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது.
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அளவாக பயணப்பட்டிருக்கிறது. படத்தொகுப்பாளர் ரேய்மெண்ட் டெரிக் கிரஸ்டா இயக்குநர் சொல்ல நினைத்த கதையை விட அவர் காட்சிப்படுத்த நினைத்த லொக்கேஷன்களை ரசிகர்களிடம் நேர்த்தியாக கொண்டு சேர்த்திருக்கிறார்
படத்தில் மிகுந்த சிறப்பம்சம் என்னவென்றால் மாணவனாக இருப்பவர்கள் எட்டு வருடம் இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக அவர்களை வருகிறார்கள் இதற்காக எட்டு வருட காத்திருக்கும் காலம் மிக முக்கியம் அதற்காக இயக்குநர் ஹலிதா சமீமின் வித்தியாசமான முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்