ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் ‘வேதா’ படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, ‘நீதானே நீதானே’ வெளியாகியுள்ளது. ‘ஹோலியான்’ மற்றும் ‘மம்மி ஜி’ ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர்.
இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது.
பாடலை வெளியிட்ட ஜான் ஆபிரகாம், “‘நீதானே நீதானே…’ பாடல் ‘வேதா’ படத்தின் ஆன்மா. என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை இது காட்டும். இந்தப் படத்தில் வெறும் ஆக்ஷன் மட்டுமல்லாது காதலும் உண்டு என்பதற்காகதான் இந்தப் பாடல்” என்றார்.
தமன்னா பாட்டியா பகிர்ந்துகொண்டதாவது, “ஜானுடன் முதல்முறையாக பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தனது கதாபாத்திரத்திற்குக் கொடுத்த அர்ப்பணிப்பு திரையில் சிறப்பாக வந்துள்ளது. இந்த பாடல் காதல் மற்றும் பல நல்ல நினைவுகள் நிறைந்ததாக இருக்கும். இது அனைவருக்கும் கனெக்ட் ஆகும் என நான் நம்புகிறேன்!” என்றார்.
இது குறித்து பாடலின் இசையமைப்பாளர் அமல் மாலிக் கூறுகையில், “இந்த காதல் மெல்லிசை ‘நீதானே நீதானே…’ நிச்சயம் ரசிகர்களின் இதயங்களை ஊடுருவும். இது பாடல் என்பதையும் தாண்டி, நான் அனுபவித்த காதலை இந்தப் பாடலில் முழுமையாகக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார்.
‘நீதானே நீதானே…’ பாடலுக்கு அமல் மாலிக் இசையமைத்துள்ளார். குணால் வர்மா பாடல் வரிகளுக்கு அர்ஜித் சிங் பாடியுள்ளார்.
நிகில் அத்வானி இயக்கி இருக்க, அசீம் அரோரா எழுதிய ‘வேதா’ படத்தை ஜீ ஸ்டுடியோஸ், உமேஷ் கேஆர் பன்சால், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, ஜான் ஆபிரகாம் மற்றும் மீனாக்ஷி தாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பான ‘வேதா’ படத்தின் முன்பதிவு தொடங்கியது! ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது!
தொடர்புக்கு: ஹைப் பிஆர் – [email protected]
ஜீ ஸ்டுடியோஸ் பற்றி:
இந்தியாவின் மும்பையில் 2012ல் நிறுவப்பட்ட ஜீ ஸ்டுடியோஸ் திரைப்படம், ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைக்காட்சி உள்ளடக்க மேம்பாடு, தயாரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமாகும். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ’கடார் 2’, மற்றும் ’12த் ஃபெயில்’ போன்ற பாராட்டப்பட்ட பல படைப்புகளை உருவாக்கியுள்ளது.
இதுமட்டுமல்லாது, சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ‘சைராட்’, ‘மாம்’, அமீர்கான் நடித்த ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’, ‘மணிகர்னிகா’, ‘தி குயின் ஆஃப் ஜான்சி’, ‘மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே’, ‘தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’, ‘கிஸ்மத்2’, ‘பங்காராஜூ’, ‘துணிவு’ மற்றும் ‘காட்டே காட்டே சா’ என பல மொழிகளிலும் உலகளவில் பாராட்டப்பட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது ஜீ தமிழ் ஸ்டுடியோஸ்.
எம்மே என்டர்டெயின்மென்ட் பற்றி:
கடந்த 2011ல் நிறுவப்பட்ட எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் மோஷன் பிக்சர்ஸ் எல்எல்பி, இந்தியாவின் மும்பையை தளமாகக் கொண்ட ஒரு முன்னணி உள்ளடக்க தயாரிப்பு நிறுவனமாகும். மோனிஷா அத்வானி, மது போஜ்வானி மற்றும் நிகில் அத்வானி ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், முழுநீள திரைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் தொடர்கள் தயாரிப்பதில் புகழ் பெற்றது.
கடந்த 12 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மொத்தமாக 30 திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றைத் தயாரித்துள்ளது. டி-டே, ஏர்லிஃப்ட், பாட்லா ஹவுஸ், பஜார், பி.ஓ.டபிள்யூ – பந்தி யுத் கே, சத்யமேவ ஜெயதே, மும்பை டைரிஸ், தி எம்பயர், ஆதுரா, திருமதி சாட்டர்ஜி vs நார்வே, மற்றும் தி எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிகழ்ச்சியான ராக்கெட் பாய்ஸ் உட்பட வணிக ரீதியாகவும் விருதுகள் நோக்கத்திலும் பாராட்டப்பட்டப் பல படைப்புகளைக் கொடுத்துள்ளது.
ஜேஏ என்டர்டெயின்மென்ட் பற்றி:
ஜே என்டர்டெயின்மென்ட் வணிகரீதியாக வெற்றி பெறும் நல்ல கதையம்சம் சார்ந்த படங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. கடந்த 2008ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து அதுபோன்ற படங்களையே தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறது.
உதாரணமாக, ஜேஏ எண்டர்டெயின்மென்ட்டின் முதல் திரைப்படமான விக்கி டோனர் விந்தணு தானம் பற்றிய நகைச்சுவை கதையாகும். இந்தப் படத்தின் இலகுவான மற்றும் நகைச்சுவையான பாணி பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டது. இந்தத் திரைப்படம் அதன் பட்ஜெட்டை விட பதினைந்து மடங்குக்கு மேல் வசூலித்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது மற்றும் சிறந்த திரைப்படம் உட்பட மூன்று தேசிய விருதுகளை வென்றது.
இதனை அடுத்து, இந்த நிறுவனத்தின் இரண்டாவது வெளியீடான மெட்ராஸ் கபே, இலங்கையின் உள்நாட்டுப் போரில் இந்தியா மற்றும் அதன் முன்னாள் பிரதமரின் சர்ச்சைக்குரிய பங்கைப் பற்றிய அரசியல் திரில்லர் கதை ஆகும். பயங்கரவாத அச்சுறுத்தல்களால் படம் குறைந்த எண்ணிக்கையிலான திரைகளில் வெளியிடப்பட்டாலும், அதன் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாக வசூலித்ததோடு நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
அதன் பிறகு பாட்லா ஹவுஸ், பர்மானு: தி ஸ்டோரி ஆஃப் பொக்ரான், அட்டாக், ஃபோர்ஸ் 2 போன்ற பல வெற்றிப் படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.