அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் டிமான்டி காலனி 2
டிமான்டி காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்தி.க்கும் டிமான்டி காலனி 2 எப்படி இருக்குது என்பதை பார்ப்போம்.
பிரியா பவானி சங்கரின் கணவன் தற்கொலை செய்து கொள்ள ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்ற காரணத்தை அறிய பேயிடம் பேசும் புத்த மத துறவிகளின் உதவியை நாடும் பிரியா பவானி சங்கர் அப்போது ஒரு திடுக்கிடும் உண்மையை அறிகிறார். இது ஒரு புறம். அருள்நிதியின் தந்தை மிகப்பெரிய செல்வந்தர். தன் இறப்புக்குப் பிறகு தன் சொத்துக்களின் 70% வெளி உலகத்துக்கு தெரியாமல் பிறந்த மகனுக்கும் தன் மனைவியின் மூலம் பிறந்த மகனுக்கு 25 சதவீதமும் என்ற உயில் எழுதி வைக்க அதைத் தாங்க முடியாத அருள்நிதி என்ன செய்வது என்று திகைக்கிறார்.
டிமான்டி காலனியில் சாகும் தருவாயில் இருந்த அருள்நிதி தான் (இந்த படத்தில் இரட்டை வேடம்) டிமான்டி காலனி டூ வில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க அவரை கருணை கொலை செய்ய கோர்ட்டில் அனுமதி பெற அந்த அனுமதியுடன் அவரைக் கருணை கொலை செய்ய மருத்துவமனைக்கு வர அந்த மருத்துவமனையின் டாக்டர் அருண் பாண்டியன் மகள் பிரியா பவானி சங்கர் ஒரு உண்மையை கூறுகிறார். உன் சகோதரன் இறந்தால் நீயும் இறந்து விடுவாய் என்று சொல்ல மீதி நடப்பது தான் டிமான்டி 2வின் கதை.
இயக்குனர் அஜய் ஞானமுத்து கதைக்களத்தை மிக அழகாக செதுக்கியிருக்கிறார். பேய் படத்துக்குரிய பயமுறுத்தலை விட அஜய் ஞானமுத்துவின் திரைக்கதை நம்மை பயமுறுத்து இருக்கிறது.
அந்த அளவுக்கு திரைக்கதையை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் வடிவமைத்திருக்கிறார். ஆவி உலகம், அதற்குள் ஒரு தலைவர், தலைவருக்கு அடிமைகள் என ஒரு கதை சொன்னாலும் அதை நம்பும்படியாக சொல்லி இருக்கிறார்.
அருள்நிதி ஒரு கதாநாயகனாக இருந்து கொண்டு படத்தில் நாயகிக்கு அதிக காட்சிகள் ஆனாலும் அருள்நிதி தான் வரும் காட்சிகளில் தன் நடிப்பின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். வழக்கமாக அவர் பேசும் நையாண்டி கிண்டல் இந்த படத்தில் இல்லை.
பிரியா பவானி சங்கர் இவர்தான் கதையின் நாயகி. தற்கொலையில் ஆரம்பித்து அவரிடம் பேச மீடியம் சென்று அதில் பல உண்மைகளை கண்டு அதை என்னவென்று தெரிந்து கொண்டு இவர் படும் பாடு திண்டாட்டம். சோகம், அழுகை, பயம், ஆச்சரியம் என தன் நடிப்பின் வெளிப்பாடுகளை அழகாக செய்து இருக்கிறார்.
இசை சாம் சி எஸ். நம்மை பயமுறுத்துவதில் பெரும்பங்கு இவரை சார்ந்து இருக்கிறது. வழக்கமாக பேய் படம் என்றால் காமெடி இருக்கும். திடீர் திடீர் என்று பயமுறுத்தல் இருக்கும். ஆனால் இந்த படத்தில் தன் திரைக்கதை மூலமே பயமுறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு மூலம் டிமான்டி காலனி மூன்றும் வரவிருக்கிறது
டிமான்டி காலனி 2 ; பேய் வெற்றி