பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
கோவையைச் சேர்ந்த முதல் பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில்முனைவோராகவும் வட அமெரிக்காவில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார்.
மகளிர் தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆதரவற்றுவதற்கு உதவுவதற்காகவும் ‘லைஃப்ரே’ என்ற அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார்.
2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நிர்வாகியாக போர்ட்லேண்ட் வணிக இதழால் அங்கீகரிக்கப்பட்டார்.
இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற விரும்பியதால் பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
இவரது நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-II’ கடந்த 15-8-2024 மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.
இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,பிபின்,ஹுசைனி உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்துடன் முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது.
அதனையொட்டி இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று(18-08-24) சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக இன்று மாலை 6 மணி அளவில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.அதற்கு முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் டீசர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பப் பட்டன.
நடிகர் இளவரசு
பின்னர் நடிகர் இளவரசு பேசும் பொழுது,”தயாரிப்பாளர்கள் எனக்கு பேசியதைவிட அதிக சம்பளம் கொடுத்தனர், நான் திரும்ப கொடுக்கிறேன் என்றவுடன் நாகரிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். இசையமைப்பாளர் திரு D இமான் இன்று வளர்ந்து தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளார். நடிகர் வைபவ் பார்ப்பதற்கு தான் அமைதியான ஆள் ஆனால் பயங்கர சேட்டைக்காரர். அதுல்யா, நடன இயக்குனர் அஜய் ராஜ் மற்றும் படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல சினிமாக்களை ஆதரியுங்கள். அவை வெற்றி அடைய உதவும் வகையில் நல்ல விமர்சனங்களை எழுதி தமிழ் சினிமா முன்னேற ஊடகவியலாளர்கள் உதவி புரிய வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
மணிகண்டா ராஜேஷ்
நடிகர் மணிகண்டா ராஜேஷ் பேசும் பொழுது,”என்னை அழைத்து வாய்ப்பளித்த மனோஜ் பெனோ மற்றும் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் அவர்களுக்கும், படப்பிடிப்பில் அதிக ஒத்துழைப்பு அளித்த வைபவ் மற்றும் பட குழுவினருக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
படத்தொகுப்பாளர் சுரேஷ் A பிரசாத்
பின்னர் பேசிய படத்தொகுப்பாளர் சுரேஷ் A பிரசாத்,” படத்தின் தயாரிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் மனோஜ் பெனோ ஆகிய இருவருக்கும், இத்திரைப்படத்தில் பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குனர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் உள்பட மற்ற பட குழுவினருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
சண்டைப் பயிற்சியாளர் ‘DON’ அசோக்
அடுத்ததாக சண்டை பயிற்சியாளர் டான் அசோக் பேசியதாவது,” இத்திரைப்படத்தில் பணிபுரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். வைபவ் அவர்களுடன் இது மூன்றாவது திரைப்படம். சண்டைக் காட்சிகளில் சீரியஸாக இல்லாமல் மிகவும் ஜாலியாக பணியாற்றினோம். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்,” என்றார்.
நடன இயக்குனர் அஜய் ராஜ்
நடன இயக்குனர் அஜய் ராஜ் பேசும்பொழுது,” இசையமைப்பாளர் D இமான் அவர்களுடன் எனக்கு இது மூன்றாவது திரைப்படம். பாடல்கள் நன்றாக இருந்தால் பணிபுரியும் நாமும் சந்தோஷமாகவும் பணிபுரிவோம். அதேபோலத்தான் இந்த படத்திலும் சிறப்பான இசையை தந்துள்ளார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்கும். நண்பர் வைபவ் மற்றும் இயக்குனர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி
ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது,”பிடிஜி யுனிவர்சலின் முதலாவது திரைப்படம் டிமான்டி காலனி-II சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர் வெளியாக உள்ளது. அடுத்து அருண் விஜய் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து, இதேபோன்று நிறைய படம் தயாரிக்க வேண்டும் என வேண்டுகிறேன். தேசிய விருது பெற்ற இமான் சாருக்கு நன்றிகள். நடன இயக்குனருக்கும், படக் குழுவினருக்கும், இயக்குனருக்கும் எனது வாழ்த்துக்கள்,” என்றார்.
நடிகர் ஜான் விஜய்
ஜான் விஜய் பேசும் பொழுது,” இத்திரைப்படம் சிறந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாகும். நானும் இளவரசு அவர்களும் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியடைந்து வருகின்றன. சகோதரர் இமானை நான் நடிக்கவும் வைத்துள்ளேன். அவரை நீண்ட வருடங்களாக தெரியும்.இத்திரைப்படத்திற்காக அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”, என்றார்.
நடிகர் ஆனந்தராஜ்
நடிகர் ஆனந்தராஜ் பேசும்பொழுது,”இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு இரண்டாவது படம் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். தயாரிப்பாளர்கள் சிறிய மற்றும் நிறைய படங்களை தயாரிக்க வேண்டும். இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். சக நடிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நகைச்சுவையான இத்திரைப்படத்தை வெற்றியடைய ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்”,என்றார்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து
அஜய் ஞானமுத்து வாழ்த்தி பேசும்பொழுது,”இந்த டீசரை ஏற்கனவே பார்த்து விட்டேன். முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக வந்துள்ளது. இமான் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்றார்.
நடிகை அதுல்யா
அதுல்யா பேசும்பொழுது,” தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளர் இமான் அவர்களுக்கு நன்றி. எங்களது படக்குழு மிகவும் ஜாலியாக இருந்தது. தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மிக்க நன்றி”, என்றார்.
இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர்
இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் பேசும்பொழுது,”இந்த வாய்ப்பளித்த பாபி மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் நன்றிகள். சிறந்த பாடல்களை அளித்த, என்னுடைய பள்ளித் தோழர் இமான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். படப்பிடிப்பின்போது நன்கு ஒத்துழைப்பு அளித்த வைபவ் மற்றும் அதுல்யாவுக்கும் மிக்க நன்றி”, என்றார்.
இசையமைப்பாளர் D இமான்
இசையமைப்பாளர் D இமான் பேசும்பொழுது,”பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் இத்திரைப்படத்தில் பணியாற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பிடிஜி யுனிவர்சல் இசை வெளியீட்டு நிறுவனத்தையும் துவங்கி உள்ளனர். அதன் மூலம் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், பாடலாசிரியர்களும், பாடகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். வைபவ்,அதுல்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்”, என பேசினார்.
நடிகர் அருண் விஜய்
அருண் விஜய் பேசும் பொழுது,”பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் ‘டிமான்ட்டி காலனி-II’ சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நானும் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.
நடிகர் வைபவ்
நடிகர் வைபவ் பேசும்பொழுது,” தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்து வாழ்த்திய சகோதரர் அருண் விஜய், இமான், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது. மிகவும் நகைச்சுவை விருந்தாக இருக்கும் என நிறைவு செய்தார்.
தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன்
தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் பேசும்போது,”எங்களது நிறுவனத்தின் வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ மற்றும் எங்களது குழுவினர், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த,எங்களது முதல் திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-II இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் எங்களது அடுத்த திரைப்படம் ஆன ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் ஹீரோ அருண் விஜய் இருவருக்கும் மிக்க நன்றி. சிறப்பான நடிகர்களை ஒன்றிணைத்து, தரமான நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தை எடுத்துள்ளோம். அது உங்களை மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என தன் பேச்சை நிறைவு செய்தார்.
வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ
வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ பேசும்போது, “பாபி பாலச்சந்திரனை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். பாபி அவர்கள் இதுவரை ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழில்களும் வெற்றி அடைந்துள்ளன. அதேபோல இதுவும் வெற்றிடைய வேண்டும் என அவரது தந்தை விரும்பினார். “டிமான்ட்டி காலனி-II” திரைப்படம் மூலமாக எங்களுக்கு முதல் வெற்றியை அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து மனமார்ந்த நன்றிகள் மற்றும் எங்களது அடுத்த படமான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமும் வெற்றியடைய வேண்டும். அடுத்த படமான ரெட்டதலயும் 75% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதன் ஹீரோ அருண் விஜய் இங்கு வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. விக்ரம் ராஜேஷ்வர் போன்ற புது இயக்குனர்களுக்கு வீட்டில் சார்பில் நிறைய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படம் வெற்றியடைய உங்களது அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்”, என முடித்தார்.
இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, லிவிங்ஸ்டன், ஷிஹான் ஹுசைனி, சாம்ஸ், பிபின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.