spot_img
HomeNewsதீபாவளிக்கு வெளியாகிறது துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்

தீபாவளிக்கு வெளியாகிறது துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்

 

இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பன்மொழி நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ’லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

துல்கர் சல்மானின் ரசிகர்களும், திரையுலக பிரியர்களும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் திரையரங்க வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வைரலான ஹிட் மெல்லிசை பாடலான ’ஸ்ரீமதி காரு’ பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முதலில் இந்தப் படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தீபாவளி வார இறுதியான அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

’லக்கி பாஸ்கர்’ படத்தை சுற்றி இருக்கும் எதிர்பார்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடிக்க கூடுதல் நேரம் தேவைப்படுவதால் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது என்று தெரிவித்திருக்கின்றனர். பான் இந்தியா ரிலீஸாக பிரம்மாண்டமாக இந்தப் படம் வெளியாவதால் ஒவ்வொரு மொழி ரசிகர்களும் தங்கள் சொந்தப் படமாக இதை உணர வேண்டும் என படக்குழு முனைப்பு காட்டி வருகிறது.

வெளியீட்டை தள்ளிப்போடுவதில் சிரமம் இருந்தாலும், படத்தின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக படக்குழு கூறுகிறது. எண்பதுகளின் பிற்பகுதி மற்றும் தொண்ணூறுகளின் முற்பகுதியை ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி மற்றும் மிகவும் திறமையான தயாரிப்பு வடிவமைப்பாளர் வங்காளன் இணைந்து விரிவான, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட செட் மூலம் மும்பையை மீண்டும் உருவாக்கியுள்ளனர்.

தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்துள்ளனர். மேலும் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் துல்கர் சல்மானின் சினிமா பயணத்தில் சிறந்த படமாக இருக்கும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நடிகை மீனாட்சி சவுத்ரி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். நவின் நூலி படத்தொகுப்பைக் கையாள்கிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் ஃபிலிம்ஸின் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர், ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வழங்குகிறார்கள்.

ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணக் கதையான ’லக்கி பாஸ்கர்’, தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 31 அக்டோபர் 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img