spot_img
HomeCinema Reviewகொட்டுக்காளி ; விமர்சனம்

கொட்டுக்காளி ; விமர்சனம்

 

சூரி, அன்னா பெண் நடிப்பில் கூழாங்கல் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் கொட்டுக்காளி. படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

நாயகனுக்கு நிச்சயமான பெண், ஒருவரை காதலிப்பது குறித்து அறிந்த குடும்பத்தார் அதற்கு செய்வினை  தான் காரணம் என்று சொல்லி நாயகிக்கு செய்வினை எடுக்க செல்லும் என்ற ஒரு வரி கதையை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.

சூரிக்கு நாயகனாக இது மூன்றாவது படம்.. இந்த படம் மெகா வெற்றி என்றால் இந்தப் படம் எப்படி என்று மக்கள் தான் கூற வேண்டும். .நாயகன் சூரிக்கு தொண்டை கட்டிக் கொண்டதால் தொண்டையில் நாம கட்டி பூசி படம் முழுக்க கீச்சு குரலில் பேசி இருக்கிறார்.

மலையாள நடிகை அன்னா பென் இதில் நாயகி.. அவரது கண்கள் மட்டுமே பேசுகிறது.. வசனம் இறுதிக்காட்சி இரண்டு வரி .

கேமராமேன் படம் முழுக்க நடிகர்களின் பின்னே கேமராவை கொண்டு சென்றிருக்கிறார். நடந்து கொண்டே இருக்கும் நடிகர்கள், ஓடிக்கொண்டிருக்கும் டூவீலர் மற்றும் ஆட்டோ, இறுதிக்காட்சியில் செய்வினை எடுக்கும் பூசாரியின் அத்துமீறல், அதை பார்க்கும் நாயகன்.. அதோடு படம் முடிந்து விடுகிறது.

படத்தில் நடிகர்கள் நடப்பதையும் ஆட்டோ டூவீலர் ஓடுவதையும் எடிட் செய்திருந்தால் மொத்த பட்டத்தின் புட்டேஜ் 20 நிமிடம் தான் வந்திருக்கும்.

படத்திற்கு பின்னணி இசை கிடையாது. இயற்கை சூழலில் கிடைக்கும் சத்தங்களை பின்னணி இசை கோர்வையாக அமைத்திருக்கிறார்கள்.

இயக்குனர் எதைச் சொல்ல வருகிறார் ? மூடநம்பிக்கையா அல்லது பெண் வர்க்கத்தின் இயலாமையா ? இன்னும் ஏகப்பட்ட கேள்விக்குறிகள் நம்முள் இருக்கின்றன. சாமானிய மக்களுக்கு இந்த படம் எந்த அளவுக்கு சென்றடையும் என்பது ஐயமே. புதுமை என்ற புரட்சியில் தேவையில்லாத முயற்சி.

 

கொட்டுக்காளி —-புத்திசாலி இயக்குனரின் முட்டாள்தனமான படம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img