செம்பியன் கிராமத்தில் நடக்கும் ஆணவ படுகொலையை எடுத்துச் செல்லும் படம் செம்பியன் மாதேவி
நாயகன் உயர் ஜாதி. நாயகி தாழ்ந்த ஜாதி. இருவருக்கும் காதல். காதலுக்கு பின் கர்ப்பம். பிறகு நடப்பது என்ன ? இதுவே செம்பியன் மாதிரி கதையின் கரு.
நாயகன் லோகு பத்மநாபன் இவர் தான் இயக்குனர். படத்திற்கு இசையும் இவரே. தயாரிப்பும் இவர் தான் என்றாலும் தானே கதாநாயகன். நடித்து இயக்கி இருந்தாலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் கதையை முன்னிலைப்படுத்தி எடுத்துச் சென்றிருக்கிறார். ஏகப்பட்ட தமிழ் சினிமாவில் நாம் பார்த்த ஜாதிய வன்கொடுமையை தான் இந்த படத்திலும் இயக்குனர் எடுத்திருக்கிறார். ஆனால் உண்மை சம்பவத்தை தழுவி கதையை வடிவமைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.
நடிப்பிலும் சரி பாடல் காட்சிகளிலும் சரி சண்டைக் காட்சிகளிலும் சரி ஒரு சினிமா ஹீரோவாக இல்லாமல் ஒரு எதார்த்த மனிதனாக நடித்திருக்கிறார்
ஒரு கிராமத்து இளைஞனின் எளிமையான உடல் மொழி கருப்பு என்றாலும் ஒரு கலையான முகம். நாயகி பிடித்திருக்கிறது. பின் சுற்றுகிறார். நாயகி மறுக்கிறார். ஒரு கட்டத்தில் காதலிக்கிறார். கர்ப்பமான உடன் ஏன் கல்யாணத்தை தள்ளி போடுகிறார் நாயகன் என்பது சரியாக புரியவில்லை.
தாழ்ந்த ஜாதி என்று தெரிந்தே காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்று வாக்களித்து கல்யாணத்தை ஏன் சிறிது காலம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று நாயகனின் மனப்போராட்டம் பார்க்கும் ரசிகர்களை ஒரு குழப்பத்தை தெளிவு படுத்தாமல் இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் தன் ஜாதியை சேர்ந்த நண்பர்கள் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களிடம் போய் உதவி கேட்பது நாயகனின் வெகுளித்தனத்தை சொல்வதா அல்லது இயலாமையை சொல்வதா என்று தெரியவில்லை
நாயகி அம்சலேகா சினிமாவின் கதாநாயகிகளுக்கு உரிய அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் ஒரு கிராமத்து பெண்ணைப் போல் வலம் வருகிறார்.
பாடல் காட்சிகளில் கிராமத்து மனம் வீசாமல் இவரின் உடல் அசைவுகள் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறது அதற்கு இவரை குறை சொல்ல முடியாது நடன இயக்குனர் தான் சொல்ல வேண்டும்.
அதேபோல் ஒப்பனை கலைஞர் தன் வேலையை சரியாக செய்யவில்லை என்பது முகம் பார்க்கும் நமக்கு புரிகிறது.
மற்றும் ஒரு நாயகி ரெஜினா இவரின் கிளைக்கதை மேலோட்டமாக தான் இருக்கிறது இவரின் நடிப்பு நாடகத் தனத்தை மீறி இருக்கிறது எதார்த்தத்தை மீறி செயற்கையான நடிப்பு.
ஜாதி வெறி பிடித்த வில்லனாக மணிமாறன் கொஞ்சம் மிரட்டி இருக்கிறார் மிரட்டல் ஆகவும் இருக்கிறார்.
மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து இயல்பாக நடித்திருக்கிறார்கள்
நாயகனே இசை அமைப்பாளர் என்பதால் பாடல்கள் பரவாயில்லை,
ஆனால் படம் முழுக்க (டி ஐ) DI சரியாக செய்தார்களா என்பது தெரியவில்லை ஏனென்றால் படம் பார்க்கும் நமக்கு காட்சிகளின் பிம்பங்களின் கலர் தெளிவில்லாமல் இருக்கிறது.
மொத்தத்தில் செம்பியன் மாதேவி பழைய கஞ்சிக்கு புதிய ஊறுகாய்