spot_img
HomeCinema Reviewநந்தன் – விமர்சனம்

நந்தன் – விமர்சனம்

 

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தங்களின் வேலை செய்யும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு கொடுத்து மேல் ஜாதி வர்க்கத்தை சேர்ந்த பெரிய மனிதன் அவனை ஆட்டுவிக்க அதனால் ஏற்படும் நிகழ்வுகளின் தொடர்புகளை நந்தன் படத்தின் கதைக்களம்.

அம்பேத்குமார் என்ற கதாபாத்திரத்தில் யாரும் ஏற்கத் தயங்கும் ஒரு பாத்திரத்தில் துணிந்து நடித்திருக்கிறார் சசிகுமார்.  தன்னுடைய இமேஜை முற்றிலும் மாற்றிக் கொண்டு .தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வேறுபாடு காட்டி, வியக்க வைத்திருக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி பெரியசாமி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலஜி சக்திவேல், சாதி வெறியாட்டத்தின் வக்கிரத்தை தனது நடிப்பு மூலம் திரையில் கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.

கிராம நிர்வாக அதிகாரியான சமுத்திரக்கனி,ஜிஎம்.குமார், ஸ்டாலின்,ஞானவேல்,மாதேஷ்,மிதுன்,சக்தி சரவணன், சித்தன் மோகன் உள்ளிட்டு படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்  பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. ஆர்.வி. சரனுடைய ஒளிப்பதிவு அந்த ஊரின் இயல்பை திரையில் பிரதிபலிக்கிறது.

ஊராட்சி மன்றங்களில் நடக்கும் சாதி பாகுபாடு மற்றும் ஆதிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு நேர்ந்த சில கசப்பான உண்மை சம்பவங்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் இரா.சரவணனுக்கு பாராட்டுக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img