spot_img
HomeNews’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

 

இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகன், “என் உதவி இயக்குநர் எழில் இயக்கி இருக்கும் படம் இது. இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”.

தயாரிப்பாளர், நடிகர் ஹரி, “‘பராரி’ படம் எங்களுடைய சின்ன முயற்சி! உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்”.

நடிகை சங்கீதா, “இதுதான் என்னுடைய முதல் படம். எங்கள் அனைவருடைய உழைப்பும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். இவர்கள் எல்லாரிடம் இருந்தும் புது விஷயங்களை தினமும் கற்றுக் கொண்டேன். எல்லாருக்கும் நன்றி”.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு நான் ஐந்தாறு படங்கள் முடித்துவிட்டேன். ஒருநாள் ராஜுமுருகனின் உதவியாளர் எழில் என்னிடம் வந்து இந்த கதையை படிக்க சொல்லி கொடுத்தார். கதையின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் பாதித்தது. அப்போதே இந்தப் படத்தை செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். ரிகர்சலில் புதுமுகங்கள் எல்லாருமே ஒரே ஸ்ட்ரெச்சில் இரண்டரை மணி நேரத்தில் படத்தை நடித்து காட்டிவிட்டார்கள். இந்த படம், படத்தில் நடித்த நடிகர்களுக்கு சமர்ப்பணம். தயாரித்த ராஜூமுருகன் அண்ணனுக்கு நன்றி. இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் எழிலுக்கும் நன்றி. லைவாக பல விஷயங்கள் பதிவு செய்தோம். இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுங்கள்”

எடிட்டர் சாம், “ஸ்ரீதர் சார்தான் என்னை இந்தப் படத்திற்கு ரெஃபர் செய்தார். இந்தப் படத்தில் நான் வேலை செய்தபோதே படத்தின் ரிசல்ட் பாசிட்டிவாக வரும் என்பதை உணர முடிந்தது. வாய்ப்புக்கு நன்றி ஸ்ரீதர் சார். எழிலின் கதையை எந்த விதத்திலும் கெடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களிம் உழைப்பு நிச்சயம் பேசப்படும். நீங்களும் படத்தை பார்க்க வேண்டும்! ”

நடிகர் புகழ் மகேந்திரன், “இது எனக்கு மூன்றாவது படம். ஹீரோவாக முயற்சி செய்து சில படங்கள் நடித்து வந்தேன். இந்தக் கதை கேட்டபோது, வில்லனாக நடிக்க பயமாக இருந்தது. ஆனால், கதை சொல்லி எழில் சார் நம்பிக்கை கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்ததைதான் நடித்திருக்கிறேன். நிறைய போட்டிப் போட்டு, கஷ்டப்பட்டு நடித்திருக்கிறோம். தொழில்நுட்ப குழுவினரும் சிறப்பான பணியை கொடுத்துள்ளனர். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குநர் எழில் பெரியவேடி, “என்னுடய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி! என்னுடைய உதவி இயக்குநர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. இந்தப் படத்தை ‘ஜிப்ஸி’ பட சமயத்திலேயே முடித்துவிட்டேன். நான் பிற தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி முடிக்கும் வரை ராஜூமுருகன் வெளியே காத்திருப்பார். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் என தெரியவில்லை. நான் கதை சொன்ன எல்லோருக்குமே கதை பிடித்திருந்தது. ஆனால், ஏதோ ஒரு இடத்தில் தயக்கம் இருந்தது. பின்புதான் ராஜூமுருகன் சார் ஹரியை உள்ளே கொண்டு வந்து இரண்டு பேரும் சேர்ந்து படத்தைத் தயாரித்தார்கள். அவர் இந்தப் படத்திற்காக எடை குறைத்தார். திருவண்ணாமலை மக்களையும் உள்ளே கொண்டு வந்து இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். கதைக்காக அனைத்து நடிகர்களுக்கும் ரிகர்சல் கொடுத்தோம். ‘ஜோக்கர்’ படத்தில் இருந்தே ஷான் ரோல்டன் எனக்கு நல்ல பழக்கம். அவரும் பாடலாசிரியர் உமாதேவியும் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. ஸ்ரீதர் இந்தப் படத்துக்காக ஆறு படங்களை விட்டுவிட்டார். இது என்னுடைய படம் என்பதைத்தாண்டி அவருடைய படம். சாமும் எனக்கு குடும்பம் போல. எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். நடிகர்களும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். இந்த பூமிக்கு நாம் எல்லோருமே விருந்தினர்கள் தான். எதுவுமே நமக்கு சொந்தம் கிடையாது. நாம் பூமியை விட்டு போகும்போது எதாவது ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்பதுதான் ‘பராரி’ படத்தின் நோக்கம். இது எங்களின் கூட்டு முயற்சி. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img