spot_img
HomeCinema Reviewநயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara: Beyond the Fairy Tale) ஆவணப்படம்...

நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara: Beyond the Fairy Tale) ஆவணப்படம் ; விமர்சனம்

நயன்தாரா மக்கள் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடும் தென்னகத்து சிவப்பு கிளியோபட்ரா. அவரின் சினிமா, காதல் திருமணம், கணவர் என அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் கதை நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara: Beyond the Fairy Tale) என்கிற பெயரில்  ஆவணப்படமாக ஓ டி டி தளத்தில் வெளியாகி இருக்கிறது

நயன்தாரா சினிமாவில் நடிகையாக அறிமுகமானது, தமிழ் சினிமாவில் நுழைந்து சில தடைகளுக்குப் பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்ததோடு, அவரது  காதல் திருமணத்தைப் பற்றி விவரிக்கிறது இந்த ’நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairy Tale – நயன்தாரா – விசித்திரக் கதைக்கு அப்பால்) என்ற ஆவணப்படம்.

நயன் – விக்கி இருவரும் சிறுவயது உருவில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதோடு தொடங்கும் இந்த ஆவணப்படம், ‘மனசின்னகரே’ படத்தில் தொடங்கி ‘ஜவான்’ வரையிலான நயனின் வாழ்க்கையை அழகாக தொட்டு செல்கிறது

உருவகேலி, உடல் எடை தொடர்பான விமர்சனங்கள் என்னை துரத்தின. என் நடிப்பை குறை சொன்னால் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், இதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் திணறினேன்” என நிதர்சனம் உடைத்திருக்கிறார் நயன்தாரா

நயன்தாரா பற்றிய ஆவணப்படமாக இருந்தாலும், இதில் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் கவனம் ஈர்க்கிறார். நயன்தாரா தன்னிடம் காதலை சொன்ன போது, அவர் எத்தகைய மனநிலையில் இருந்தார், என்பதோடு, நயன்தாரா உடனான அவரது காதல் விசயம் வெளியே தெரிந்தவுடன்  வந்த விமர்சனங்களை அவர் எடுத்துக்கொண்ட விதம் குறித்து கூறியது சிறப்பு

21 ஆண்டு காலமாக சினிமாவில் தனித்தொரு பெண்ணாக கோலோச்சும் நடிகையின் திரையுலக பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம் இன்னும் சிறப்பாக ஒரு படம் பார்க்கும் உணர்வை தந்திருக்க வேண்டும்..குறிப்பாக இரு காதலர்களின் உரையாடல்களாகவும், திருமண நிகழ்வாகவும் சுருங்கிவிடுகிறது நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர் எப்படி லேடி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பதை ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ முழுமையாக பதிவு செய்யவிலையோ என்கிற ஏனம் ஏற்படவே செய்கிறது. செய்துள்ளது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசி இருக்கலாம். இயக்கிய கவுதம் மேனன் இன்னும் நிறைய கேட்டு பெற்றிருக்கலாமே என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img