சார்லி மற்றும் புதுமுகங்களின் அணிவகுப்பில் ஒரு உண்மைக் கதையை உலகிற்கு எடுத்து சொல்லும் படம் லைன் மேன்.
தூத்துக்குடி உப்பளத்தில் லைன் மேனாக வேலை பார்ப்பவர் சார்லி. அவர் மகன் நாயகன். உப்பளத்தில் அடிக்கடி மின்சார கசிவு மின்சார பிரச்சனை வர அதற்கு தீர்வு காண சார்லியின் மகன் ஒரு புதுவிதமான கருவியை கண்டுபிடிக்கிறார். சூரிய உதயத்தில் தெருவிளக்கு அணைந்து விடும் அஸ்தமனத்தில் விளக்கு எரியும். இதற்கு அரசின் உதவி கேட்டு பலமுறை விண்ணப்பிக்கிறார். சென்னை சென்றால் முதலமைச்சரின் கவனத்திற்கு தன் கண்டுபிடிப்பைஎடுத்து செல்லலாம் என்று சென்னைக்கு கிளம்புகிறார். அங்கு பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் ஊருக்கே திரும்புகிறார்.
இது ஒருபுறம் இருக்க கதையின் எதிர் நாயகன் இவர்தான் உப்பளத்தின் அதிபதி ஏழை மக்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து அந்த வட்டிக்கு பதிலாக தன் உப்பளத்தில். கூலி வேலை செய்ய சொல்லி ரத்தத்தை உறிஞ்சுகிறார். அரசு மின்சாரத்தை திருட்டுத்தனமாக எடுத்து தன் தொழிலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள அந்த திருட்டு மின்சாம்ர மூலம் பல உயிர்களின் இழப்பு ஏற்படுகிறது. லைன் மேனாக இருக்கும் சார்லி மேலிடத்திற்கு இவரின் திருட்டுத்தனத்தை சொல்ல சார்லின் மேல் எதிர் நாயகனின் கோபம் வன்மமாக மாறுகின்றது.
ஊருக்கு வந்த நாயகன் புது கலெக்டரின் ஆதரவால் தனது கண்டுபிடிப்பு வெற்றிகரமாக அரசு பார்வைக்கு செல்லும் என்று கலெக்டர் உறுதிமொழி தர சந்தோசத்தில் இருக்கும் நாயகனுக்கு ஒரு பேரிடியாக அவரது தந்தை மின்சாரம் தாக்கி சுயநினைவை இழக்கிறார். அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்து அவரின் லைன் மேன் வேலை நாயகனுக்கு கிடைக்க தன் கண்டுபிடிப்பின் தியாகங்களை மறந்து தந்தையை காப்பாற்ற லைன் மேன் வேலைக்கு செல்கிறார். இதுவே லைன் மேனின் முழு கதை.
இது கதை என்று சொல்வதை விட உண்மை சம்பவமாக இருப்பதால் நிஜத்தில் நடந்த விஷயங்களை அப்படியே சினிமாத்தனம் இல்லாமல் திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர் நம் தாய் திருநாட்டில் பல விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அது மக்கள் பயன்பெற எவ்வளவு முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள் என்பது இந்த படத்தில் நாயகன் மூலம் நமக்கு புரிய வருகிறது.
ஒரு சாதாரண மனிதன் தன் கண்டுபிடிப்புகளை அரசாங்கத்திற்கு கொண்டு செல்ல எவ்வளவு கஷ்டங்கள் எவ்வளவு தடங்கல்கள் என்பதை இந்த படத்தின் மூலம் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. பல அர்ப்பணிப்புகளை கடந்து தான் பல விஞ்ஞானிகள் நமக்கு பல அற்புதங்களை தந்திருக்கிறார்கள் என்பது இந்த கதையின் மூலம் நமக்கு தெளிவு படுத்துகிறது.
படத்தின் நாயகன் புதியவர் என்றாலும் நடிப்பில் பண்பட்ட கலைஞராக தெரிகிறார். சோகம், இயலாமை என பல பரிமாணங்களில் நம்மை நெகிழ வைக்கிறார்.
நாயகனின் தந்தையாக சார்லி. இவரைப் பற்றி நாம் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இவர் ஒரு நகைச்சுவை கலைஞனாக தான் மக்களுக்கு அறியப்பட்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக பல சிறந்த குணச்சித்திரப் பாத்திரங்கள் மூலம் ஒரு சிறந்த கலைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் தந்தையாக வாழ்ந்து தன் மகனின் கனவை பூர்த்தி செய்ய அவர் பங்களிப்பு சிறப்பு.
படத்திற்கு நாயகி தேவை என்பதால் அவரும் ஒரு கூலித் தொழிலாளியாக வலம் வருகிறார். படம் முழுவதும் தூத்துக்குடி உப்புளத்தில் நடப்பதாக இயக்குனர் திரைக்கதை அமைத்து இருக்கிறார். ஆனால் உப்பளத்தில் படப்பிடிப்பு நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை நடிகர் சார்லி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும் போது இயக்குனர் மற்றும் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் கஷ்டங்கள் படம் பார்க்கும் நமக்கு புரிகிறது.
ஒரு குறைவான பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை தந்திருக்கும் இயக்குனருக்கு நமது வாழ்த்துக்கள்.
இந்த படம் OTT யில் மக்கள் பார்க்கலாம் _____லைன் மேன் ____மேன் ஆஃப் தி மேட்ச்