பேமிலி படம் என்ற உடன் நம் நினைவு இருவது விசு, வி.சேகர் இவர்கள் படம் தான். அந்த டைப் தான் இந்தப் படம் என்றால் அதுதான் இல்லை. ஒரு ஃபேமிலியில் மூன்று சகோதரர்கள். முதல் சகோதரன் வக்கீல். இரண்டாம் சகோதரன் ஐடி. மூன்றாவது கடைசி இவர் சினிமாவுக்கு கதை எழுதி மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் பல சினிமா கம்பெனிகளுக்கு கதை சொல்லி அதில் மிகப் பெரிய சினிமா நிறுவனம் இவரின் கதையை தேர்வு செய்து அட்வான்ஸ் கொடுக்க நாயகனின் வற்புறுத்துதலால் இவரின் கதையை தவிர இயக்குனர் ஆசை நிறைவேற ஆசையாக மாறிவிடுகிறது
அதனால் தன் தம்பியின் ஆசை நிறைவேற்ற சகோதரர் இருவரும் தாய் தந்தை மற்றும் தாத்தா இவர்கள் அனைவரும் சேர்ந்து ஃபேமிலியாக படம் எடுக்கிறார்கள். இதுவே ஃபேமிலி படம். படத்தின் இயக்குனர் அவர் தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை திரைக்கதையாக்கி இயக்கி இருக்கிறார்.
நாயகன் இவர் ஏற்கனவே டைனோஸார் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சிறந்த நடிகராக அறியப்பட்டார். இந்தப் படத்தில் ஒரு பண்பட்ட நடிகராக தன்னை மாற்றி இயக்குனராகம் ஆசையில் அவர் கதாபாத்திர அமைக்கப்பட்டு இருந்து அதற்கேற்றார் போல் ஆசை நிறைவேற ஆசை ஏக்கம் கனவுகள் காதல் சகோதர பாசம் என தன் நடிப்பில் பல பரிமாணங்களை நமக்கு வழங்கி உள்ளார். எதிர்காலம் இவருக்கு சிறப்பாக இருக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
அண்ணனாக வரும் விவேக் பிரசன்னா இவரை நாம் பல படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம். அந்த ரசிப்பை சற்று குறைக்காமல் நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார் பிரசன்னா.
இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் நாயகி பளிச்சென்று முகம். ஆனால் முகபாவம் கொஞ்சம் பயிற்சி தேவை. மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
ஒரு அறிமுக இயக்குனரின் அவஸ்தைகள் ஏமாற்றங்கள் இவை அனைத்தும் எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு தன் படத்தில் சொல்லி இருக்கிறார். ஒரு எதார்த்தமான விஷயத்தை சினிமா தனம் இல்லாமல் மிக எதார்த்தமாக படத்தில் சொல்லி இருக்கும் விதம் அருமை.
ஃபேமிலி படம் பேமிலி உடன் பார்க்கலாம்