spot_img
HomeCinema Reviewராஜா கிளி - விமர்சனம்

ராஜா கிளி – விமர்சனம்

அன்னை மடி எனும் பெயரிலான அனாதை மற்றும் ஆதரவற்றோர்களுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார் சமுத்திரக்கனி. இவர் ஒரு முறை வீதியோர குப்பையில் கிடைக்கும் உணவை உண்ணும் ஒரு முதியவரை காண்கிறார். அவரை அழைத்து வந்து குளிக்க வைத்து சிகை அலங்காரம் செய்து உணவு உண்ண வைத்து ஆதரவும், பரிவும் காட்டுகிறார். அதன் பிறகு அவருடைய கையில் இருக்கும் மூட்டையை திறந்து பார்க்கிறார். அதில் ஒரு நாட்குறிப்பு இருப்பதை காண்கிறார். ஒரு ஆர்வத்தில் அதனை வாசிக்கவும் தொடங்குகிறார். அவருடைய வாசிப்பின் மூலம் அந்த முதியவர் இந்தியா முழுவதும் பிரபலமான தொழிலதிபர் முருகப்பன் மன்றாடியார் எனத் தெரியவருகிறது.

அவர் கைப்பட எழுதிய அவருடைய அனுபவம் காட்சிகளாக விரிகிறது.

பிரபலமான தொழிலதிபர் முருகப்பன் மன்றாடியார், தீவிர முருக பக்தர் ,அவர் தன் சொந்த வாழ்க்கையில் மனைவி தெய்வானையை தவிர வள்ளிமலர் மற்றும் விசாகா என இரண்டு பெண்களுக்கு சிக்கலான தருணத்தில் ஆதரவு அளிக்கிறார்.

இதனால் அவரின் வாழ்க்கையில் சூறாவளி ஏற்படுகிறது. தொழிலதிபராக இருந்த முருகப்பன் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியாகவும் மாறுகிறார். அதன் பின் இந்த சமூகம் அவரை புறக்கணிக்கிறது. பைத்தியமாக அலைகிறார்.

குற்றச் செயலில் தொழிலதிபர் முருகப்பன் நேரடியாக ஈடுபடவில்லை என்பது உரிய விசாரணைக்குப் பிறகு தெரிய வருகிறது. அதன் பிறகு அவர் உச்ச நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்படுகிறார்.

இதன் பிறகு அவருடைய குடும்பத்தினர் அவரை ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

தொழிலதிபராக கொடிகட்டி பறக்கும் சிலர் பெண் மோகத்தால் வீழ்ச்சி அடைவதையும், தொழில் போட்டி காரணமாக மறைமுகமாக வீழ்த்தப்படுவதையும் மையப்படுத்திய இந்தக் கதையின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி ரசிக்க வைக்கிறது.

தொழிலதிபர் முருகப்பன் மன்றாடியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா – தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறார். அதிலும் இளம் பெண்ணுடனான பாடல் கட்சியில் மேஜையில் நடனமாடுவது எல்லாம் உச்சபட்ச தன்னம்பிக்கை.

சமுத்திரக்கனி வழக்கம்போல் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒரு எல்லைக்கு மேல் கணவன் அதிக அளவு சம்பாதிக்கத் தொடங்கினால் ‘அவருக்கு மனைவியைத் தவிர வேறொரு பெண்ணுடன் திருமணம் கடந்த உறவு இருக்கும் ‘ எனும் அந்த மனைவியின்- பெண்மணியின்  நம்பிக்கை என்பது சமூகத்தில் கடந்த தசாப்தத்தில் இருந்தது.

ஐம்பது வயதைக் கடந்த தொழிலதிபர்களுக்கு இருக்கும் பெண் தொடர்பு என்பது பாலியல் ரீதியிலானதல்ல என்பதனையும் இந்த படைப்பு விவரித்திருக்கிறது. இருந்தாலும் இது ஒரு ஆணாதிக்க பார்வையாகவே இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஒளிப்பதிவு ,பாடல்கள், பின்னணி இசை படத்தை ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. உரையாடல்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை. இருப்பினும் தந்தையை இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அதனை மகன் இயக்கி இருப்பது தான் வியப்பை தருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img