வெங்காயம் புகழ் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் அவர் குடும்பத்தினர் நடிப்பில் பயாஸ்கோப் வெங்காயம் என்ற படத்தை இயக்கியசங்ககிரி ராஜ்குமார் அந்தப் படத்தை எப்படி எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தார் என்பதைவிவரிக்கும் படம் தான் பயாஸ்கோப்
மூடநம்பிக்கைக்கு எதிராக அவர் எடுத்திருந்த வெங்காயம் படம் சினிமா வட்டாரத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது ஒரு பாடலுக்கு சத்யராஜ் கௌரவத் தோற்றத்தில் தோன்றினார் இயக்குனர் சேரன் வெங்காயம் படத்திற்கு முழு ஆதரவு தந்து படத்தை வெற்றி பெற செய்தார் அதைஅப்படியே பயாஸ்கோப் என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்
தன் சொந்த கிராமத்தில் சொந்தங்களோடு படம் எடுக்க ஆரம்பிக்கும் அவரின் முயற்சி எதிர்கால இயக்குனருக்கு ஒரு நல்ல பாடம் சொந்தங்களை அவர் நடிக்க வைக்கும் பாடு பார்ப்பதற்கு நமக்கு நகைச்சுவையாக இருந்தாலும் அதன் கஷ்ட நஷ்டங்களை தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டி இருக்கிறார்
அவர் பாட்டி படத்தின் மைய கதாபாத்திரம் கிராமத்து மனம் மாறாமல் அவரின் வசன உச்சரிப்பு ஒரு வாழ்வியல் சினிமாவை நமக்கு காட்டுகிறது அது மட்டும் இல்லாமல் அவர் இயக்குனராகி ஆக்சன் சொல்லும் விதம் அருமையோ அருமை
கேமரா ட்ராலி கிரேன் இந்தப் பொருள்களுக்கு இயக்குனரின் சொந்தங்கள்வைக்கும் பெயர் மிக அருமை நடிக்க ஆசைப்படும் மக்களுக்கு மத்தியில் கிராமத்தில்மக்களை நடிக்க கூப்பிட்டால் ஏதோ ஊசி போட வந்த டாக்டரை பார்த்த பயப்படுவது போல் ஓட ஆரம்பிக்கின்றனர்
ஆனால் இயக்குனர் எடுத்த படத்தை மக்களிடம் போட்டுக் காட்டி அவர்கள் மனதில் நடிக்கும் ஆசையை தூண்டும் விதம் இயக்குனரின் பங்களிப்பு மிக அழகாக தெரிகிறது எடுத்த படத்தை வெளியிடப்படும் கஷ்டங்கள் ஏமாற்றும் சில விநியோகஸ்தர்கள் எனசினிமாவை அலசி ஆராய்ந்து இருக்கிறார் இயக்குனர் பயாஸ்கோப் சினிமா எடுக்க ஆசைப்படும் ஒவ்வொருவரும்பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல ஒரு பாடம்
பயாஸ்கோப் — முயற்சி திருவினையாக்கும்