குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், ஆண்டனி அபிராமையா மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் பாட்டல் ராதா. குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற அரசு வாசகத்தை கதையின் கருவாக்கி திரைக்கதை உருவாக்கி இயக்கி இருக்கிறார் தினகரன்.
சிவலிங்கம் குரு சோமசுந்தரம் ஒரு முழு நேர குடிகாரன். அவரின் போதையில் இருந்து மீட்க அவர் மனைவி குடி மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார். அங்கு முடியாமல் அவதிப்படும் குரு சோமசுந்தரம் சென்டரில் இருந்து தப்பித்து வெளியே வந்து நான் திருந்தி விட்டேன் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார். பின்னர் நடப்பது என்ன எந்பதூ பாட்டல் ராதாவின் கதை.
படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை திரையில் தோன்றும் காட்சிகள் பார்வையாளர்களின் யூகத்தின் படி பயணிக்கிறது. அதனால் பார்வையாளர்கள் இடத்தில் சோர்வு ஏற்படுகிறது. இருப்பினும் இயக்குநர் மது அருந்துபவர்களின் நடவடிக்கையையும் , அதனால் பாதிக்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் உளவியலையும் நேர்த்தியாக விவரித்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் மறுவாழ்வு மையத்தில் குடிக்கு அடிமையானவர்கள் சிகிச்சை பெறுவதும், அவர்களை மது அருந்தும் பழக்கத்திலிருந்து மீட்பதற்காக மேற்கொள்ளும் விழிப்புணர்வு சிகிச்சையும், நகைச்சுவையாக அமையாமல் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருப்பதால் ரசிக்க முடியவில்லை. அத்துடன் மது பழக்கத்திற்கான மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேரும் குடி நோயாளிகள் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் என காட்சிகள் அமைத்திருப்பது மது அருந்துபவர்களுக்கு மறுவாழ்வு மையம் குறித்த எதிர்மறையான எண்ணமே ஏற்படும்.
மது அருந்தும் பழக்கத்தால் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இடையேயான உறவில் ‘அன்பு பகிர்தல்’ என்ற அடிப்படை உணர்வு மறைந்துவிடும் என காட்டி இருப்பது அருமை.
மது அருந்தும் பழக்கத்தால் குடும்பத்தின் ஏற்படும் விரிசலை பற்றி பேசும் திரைக்கதையில் அதற்கு முரணான கதாபாத்திரம் வலிமையாக அமைக்கப்படாததால் சோர்வும், அயர்ச்சியும் ஏற்படுகிறது.
பாட்டல் ராதா எனும் ராதா மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் குரு சோமசுந்தரம் குடி நோயாளியாகவே நடித்து, ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இவரின் மனைவி அஞ்சலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சஞ்சனா நடராஜன் கிடைத்த வாய்ப்பை திறமையாக பயன்படுத்தி தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். மறுவாழ்வு மையம் நடத்தும் அசோகன் எனும் கதாபாத்திரத்தில் ஜான் விஜய் வழக்கமான பாணியைத் தவிர்த்து சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். மாறன் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார்
படத்தின் மூலம் ஒரு சிறந்த கருத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் இயக்குனர் தினகரன் சிவலிங்கம் ஒரு சிறந்த கருத்தாழம் மிக்கவர் என்பது நமக்குத் தெரிய வருகிறது. இவரின் சமுதாய சிந்தனை கதைக்கு நம்முடைய வாழ்த்துக்கள்.