spot_img
HomeNews"அஜித் சார் ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தார்" - நடிகர் ஆரவ்!

“அஜித் சார் ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தார்” – நடிகர் ஆரவ்!

 

அஜர்பைஜான் சாலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான BTS வீடியோ கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சில தருணங்கள் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ரசிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ‘விடாமுயற்சி’ படக்குழுவின் அர்ப்பணிப்பையும் உணர்த்தியது.

குறிப்பாக, அந்த தருணத்தில் காரை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற அஜித்குமார், உடனிருந்த நடிகர் ஆரவுக்கு எந்த ஒரு அடியும் படாமல் பார்த்துக் கொண்டார்.

நடிகர் ஆரவ் அந்த தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “இது நன்கு திட்டமிடப்பட்ட ஷாட்! ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்த முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்து அந்த காட்சியை படமாக்கி முடித்தோம். பின்பு, அஜித் சார் என்னை தனியாக விடவில்லை. அவரே மருத்துவமனைக்கு என்னை அழைத்து சென்றார். என் எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பார்த்த பிறகுதான் அவர் நிம்மதி அடைந்தார். என்னைக் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டதும் நான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் இல்லாமல் நின்றேன். அடுத்த நாளே, மீண்டும் ஷூட்டிங் வந்தார் அஜித் சார். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் ஏதும் பயன்படுத்தாததை அவர் உறுதி செய்து கொண்டார்.

அவர் ரசிகர்கள் அவரிடம் எப்போதும் சிறந்ததை எதிர்பார்ப்பார்கள் என்பதால் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதால் அவர் டூப் பயன்படுத்தவில்லை. அப்போதுதான், அவருக்கு பில்லியன் கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கான காரணத்தை என்பதை என்னால் உணர முடிந்தது” என்றார்.

‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப குழு:

இயக்குநர்: மகிழ் திருமேனி,
இசை: அனிருத் ரவிச்சந்தர்,
ஒளிப்பதிவாளர்: ஓம் பிரகாஷ் ISC,
எடிட்டர்: என்.பி.ஸ்ரீகாந்த்,
கலை இயக்குநர்: மிலன்,
ஸ்டண்ட் மாஸ்டர்: சுப்ரீம் சுந்தர்,
நடன இயக்குநர்: கல்யாண்,
ஆடை வடிவமைப்பு: அனு வர்தன்,
பாடலாசிரியர்: விஷ்ணு எடவன், அறிவு, அமோக் பாலாஜி, மோகன் ராஜா,
நிர்வாக தயாரிப்பாளர்: சுப்ரமணியன் நாராயணன்,
தயாரிப்பு நிர்வாகி: ஜே. கிரிநாதன், கே ஜெயசீலன்,
ஸ்டில்ஸ்: ஜி. ஆனந்த் குமார்,
விளம்பர வடிவமைப்பு: கோபி பிரசன்னா,
ஒலிப்பதிவு: டி. உதய்குமார்,
விஎஃப்எக்ஸ்: ஹரிஹரசுதன்,
DI வண்ணக்கலைஞர்: பிரசாத் சோமசேகர்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ் குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img