இது குறித்த சமூக வலைத்தள பதிவில் நானி கூறியுள்ளதாவது…: “நாங்கள் எங்கள் ஹாட்ரிக்கில் இணைந்துள்ளோம் 🙂 இது அற்புதமான காவியமாக இருக்கும். #Paradise இப்போது N’Ani’Odela படம். அன்புள்ள @anirudhofficial உங்களை வரவேற்கிறோம்”
இதற்கு பதிலளித்துள்ள அனிருத், “இந்த திரைப்படம் ஸ்பெஷலான ஒன்று. என் அன்பான @NameisNani மற்றும் @odela_srikanth லெட்ஸ் கோ கிரேஸி ️️️ எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்திற்காக ஒரு சக்திவாய்ந்த மாறுபட்ட அழுத்தமிகு திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இப்படம் நானியை முற்றிலும் புதிய, வெகுஜன அவதாரத்தில் காட்டும். நடிகர் நானி மிகவும் தீவிரமான மற்றும் ஆற்றல்மிக்க பாத்திரத்தில் நடிக்கிறார்.
தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு, மிகப்பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படத்தை உருவாக்குகிறார். நடிகர் நானியின் திரை வாழ்க்கையில், மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இப்படம் இருக்கும்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
நடிகர் : நானி
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : ஸ்ரீகாந்த் ஒடேலா தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி
பேனர்: SLV சினிமாஸ்
இசை – அனிருத் ரவிச்சந்தர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ