spot_img
HomeNewsடிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆஃபீஸ் சீரிஸ் வரும் பிப்-21 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆஃபீஸ் சீரிஸ் வரும் பிப்-21 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது

 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஆஃபிஸ்’ சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸின் புரோமோக்கள், டைட்டில் பாடல் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது, இந்த சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோ, ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தையும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை பாணி திரைக்கதையையும் எடுத்துக்காட்டுகிறது.

கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தாசில்தார் அலுவலகத்திற்கு வருவதில் இந்த புரோமோ துவங்குகிறது. அவர் கிராமப்புற குடும்ப பின்னனியில் இருந்து வருவதால், அவர் தனது கணவரின் பெயரைக் கூற மறுக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கிறது. முழு அலுவலகமும் அவரின் கணவரின் பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. இறுதியில், அவள் சைகை மொழி மூலம் பெயரையறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்பின்னான வேடிக்கையான சம்பவங்கள் நகைச்சுவையுடன் முடிவடைகின்றன.

இந்த புரோமோ கிரேஸியான கிராமத்தையும் அதன் மக்களையும் விவரிக்கும் வகையில், “வில்லங்கமான கிராமமும், அட்ராசிட்டியான ஆஃபீஸும்” என்ற பொருத்தமான டேக்லைனுடன் முடிகிறது.

நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை, கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன்நாத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸான ​​‘ஹார்ட் பீட்’ இல் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள இருவர் இடம்பெற்றுள்ளனர்.

​​‘ஹார்ட் பீட்’ சீரிஸில் நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா அரவிந்த், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபத்திய, ‘ஹார்ட் பீட்’ சீரிஸை ரசித்தவர்கள், இந்த ‘ஆஃபீஸ்’ சீரிஸைக் கொண்டாடுவார்கள். இந்த ஆஃபீஸ் சீரிஸின் கதை, ஒரு சிறிய, அழகான கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும், அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பின்னணியில், ஒரு அரசு அலுவலகத்தில் நடக்கும் நகைச்சுவையான நிகழ்வுகளும், வித்தியாசமான சம்பவங்களும், பார்வையாளர்களைச் சிரிப்பில் ஆழ்த்துவது உறுதி. இந்த ஆஃபீஸ் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலான நகைச்சுவையால் நிரம்பியுள்ளது. மனம் விட்டுச் சிரித்து மகிழ, ஒரு அட்டகாசமான சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img