மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ்த் திரைப்படமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பிப்ரவரி 21,2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் குழுவான, அதன் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்டோர், நேற்று மாலை அச்சு மற்றும் சமூக ஊடகத்தினருடன் உரையாடி தங்கள் அனுபவங்களையும், இத்திரைப்படத்தைப் பற்றிய உற்சாகமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் பவிஷ் நாராயண் கதாநாயகனாக அறிமுகமாக, திறமைமிக்க அனிகா சுரேந்திரனும் இணைந்து நடிக்கிறார். இதில் ரம்யா ரங்கநாதன், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன், இவர்களுடன் பிரபலமான மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சித்தார்த்தா ஆகியோருடன் மூத்த நடிகர்களான ஆர். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி ஆகியோரும் நடிக்கின்றனர்.
படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், இந்த படத்தின் கதையை விவரிக்கும் வகையில் ஈர்க்கக்கூடிய பாடல்கள் அமைந்துள்ளன. பிரியங்கா மோகன் ‘கோல்டன் ஸ்பாரோ’ என்ற பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார், இந்த பாடல் ‘காதல் ஃபெயில்’, ‘யெடி’ மற்றும் ‘புள்ள’ போன்ற பாடல்களுடன் தரவரிசையில் முன்னணி இடத்தை பெற்றுள்ளது.
நடிகர்கள் தங்கள் உற்சாகத்தையும், படத்தில் பணிபுரிந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர், அறிமுக நடிகர் பவிஷ் நாராயண் இந்த படத்தில் அறிமுகமாவதை ‘கண்ட கனவு பலித்தது’ என்றும், அனிகா சுரேந்திரன் உணர்ச்சிமிக்க மற்றும் ஆழமான கதை என்றும் கூறினார்.
இந்தத் படத்தைப் பற்றி பேசுகையில், ரம்யா மற்றும் ராபியா தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி கூறும்பொழுது, “இந்த படம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது தமிழ் சினிமாவுக்கு புதிய திறமைகளைக் கொண்டுவந்துள்ள, அதே நேரத்தில் பொழுதுபோக்கு மற்றும் பார்வையாளர்களுடன் ஒன்றிணையும் வகையில் ஒரு ஈர்க்கக்கூடிய கதையை வழங்குயுள்ளது”.
அறிமுக நடிகர் வெங்கடேஷ் மேனன், முன்னதாக தனுஷ் இயக்கிய படங்களில் உதவியாளராக பணியாற்றியதால், தனுஷ் இயக்கத்தில் அறிமுகமாகும் வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். “எப்போதும் ஒரு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்த தனுஷ் சார் போன்ற ஒரு படைப்பாளியுடன் பணியாற்றுவது ஒரு கனவு பலிக்கும் தருணமாகும். கடந்த காலங்களில் அவருக்கு உதவி செய்ததால், அவரது இயக்கத்திற்காக கேமராவுக்கு முன்னால் காலடி வைப்பது உற்சாகமாகவும் சவாலானதாகவும் இருந்தது,”என அவர் பகிர்ந்து கொண்டார்.
ஒரு வலுவான குழு, நம்பிக்கைக்குரிய இசை மற்றும் தனுஷின் தொலைநோக்கு பார்வையுடன், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, இந்த பிப்ரவரியில் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.