spot_img
HomeNewsராகுல் பரமஹம்சா இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுப்ரமணி’!

ராகுல் பரமஹம்சா இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுப்ரமணி’!

 

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வின்சென்ட் செல்வா தற்போது ‘சுப்ரமணி’ என்ற புதிய ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். ‘திரௌபதி’ உள்ளிட்ட பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ராணுவ நடவடிக்கைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் அரியவகை நாய் இனமான ‘பெல்ஜியன் மாலினோயிஸ்’ முதன்முறையாக இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்த நாயைப் படத்தில் நடிக்க வைப்பதற்கு ஏற்ப பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது, நடிகர் ரிச்சர்ட் ரிஷி நாயுடன் ஒரு மாதத்திற்கு மேலாக நேரம் செலவிட்டு பழகி வருகிறார். இப்படம் எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லராக இருக்கும். முன்னதாக ‘ஜித்தன் 2’ படத்தைத் தயாரித்த வின்சென்ட் செல்வாவின் உதவியாளரான ராகுல் பரமஹம்சா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே கொடைக்கானலில் உள்ள அடர் வனப்பகுதியில் நிறைவடைந்துள்ளது மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். இத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

படத்தின் எழுத்தாளரான இயக்குநர் வின்சென்ட் செல்வா பகிர்ந்து கொண்டதாவது, “மனிதனின் சிறந்த நண்பன் நாய்கள் மட்டும்தான். புனித நூல்கள், புராணங்கள், வரலாற்றுப் படைப்புகள் இவற்றில் எல்லாம் நாய்கள்தான் மனிதர்களுக்கு சிறந்த துணையாக இருந்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான ஆரம்பகால உறவு 15,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற உண்மை என்னை ஈர்த்தது. தவிர அகிரா குரோசாவா, ஸ்டீபன் கிங், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உட்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் பலர் தங்கள் படைப்புகளில் எப்போதும் ‘நாய்களை’ முக்கியப் கதாபாத்திரங்களாகக் கொண்டு வந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன். பல வருடங்களாக, நாயை மையக்கருவாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அது ‘சுப்ரமணி’ படம் மூலம் நடந்திருக்கிறது. இதில் ‘பெல்ஜியன் மாலினோயிஸ்’ என்ற அரிய இனத்தைச் சேர்ந்த நாய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் பார்வையாளர்களை மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

இப்படத்தை எஸ் புரொடக்ஷன்ஸின் எஸ். சௌந்தர்யா தயாரிக்கிறார். இவருடன் பிரனவ் & பாலாஜி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு – அகிலேஷ் காத்தமுத்து,
ஆடியோகிராபி – லக்ஷ்மி நாராயணன்,
எடிட்டர் – சுஜிர்பாபு. எஸ்,
கலை இயக்குநர் – சரவண அபிராமன்,
ஆக்‌ஷன் – ராம்போ விமல்,
டான்ஸ் மாஸ்டர் – நோபல்,
வசனம் – எஸ். டாஸ்,
பாடல் வரிகள் – கபிலன்,
கூடுதல் வசனம் – எஸ் டாஸ் & மில்லர்,
விஎஃப்எக்ஸ் பிக்சல் – கலை,
ஸ்டில்ஸ் – பவிஷ்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்,
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – குமரன். கே,
புராஜெக்ட் ஹெட் மற்றும் இணை தயாரிப்பாளர்கள் – பிரனவ் & பாலாஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img