spot_img
HomeNewsநடன இயக்குநர் சதீஷ்  இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நடன இயக்குநர் சதீஷ்  இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக,  இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில்,  உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்  இன்று வெளியாகியுள்ளது.

காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலீஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும், புதுமையான, மிகவும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்திருப்பது, மேலும் படத்தின் ஆவலை தூண்டுகிறது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர் ராகுல், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தை  தயாரித்துள்ளார்.

டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து, நடிகராகவும் வலம் வரும் சதீஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  இன்றைய இளைய தலைமுறை காதலைக் கொண்டாடும் விதத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, “அயோத்தி” படப்புகழ் ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  ஜென் மார்டின்  இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார், எடிட்டராக RC பிரனவ் பணியாற்ற, மோகன் மகேந்திரன் கலை இயக்கம் செய்துள்ளார். சண்டைப்பயிற்சி – பீட்டர் ஹெயின்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img