spot_img
HomeCinema Reviewசப்தம் ; விமர்சனம்

சப்தம் ; விமர்சனம்

ஆதி, சிம்ரன், லைலா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சப்தம்.

கதைக்களம் காலேஜ் ஒன்றில் மாணவர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்ள. இது ஆவி பிசாசின் வேலை என்று விஷயம் பரவ. அதை கண்டுபிடிக்கும் நபராக ஆவி பேய்களை விசாரிக்கும் நபராக இருக்கும் ஆதியின் உதவியை காலேஜ் நாட காலேஜ்க்கு வருகிறார் ஆதி.

அங்கு சில சம்பவங்கள் இவரை பல கேள்விகளை எழுப்ப தற்கொலைக்கான காரணம் எது என்பதை அறியும்போது பல எதிர்பாராத திருப்பங்கள் படம் பார்க்கும் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதுவே சப்தம் படத்தில் கதை.

அமைதியான மற்றும் அழுத்தமான ஆராய்ச்சியாளர் வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் நாயகன் ஆதி.நாயகியை ஓர் சக்தி பின் தொடர்வதைக் கண்டுபிடிக்கும் நேரம் உட்பட பல நேரங்களில் அக்காட்சிகளின் உணர்வுகளைத் தம் உடல்மொழியாலேயே நமக்குக் கடத்திவிடுகிறார்.

ஆவியால் பாதிக்கப்படவராக வழக்கமான கதாநாயகி வேடத்தில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். புரியாத புதிரான மருத்துவ ஆய்வாளராக, ஆவிகளிடம் மாட்டிக் கொண்டு தவித்து கதறும் போதும், அங்கே நடக்கும் சம்பவங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் முழு பங்களிப்பை கொடுத்துள்ளார்.

சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா, ராஜீவ்மேனன் என நிறையப்பேர் படத்தில் இருக்கிறார்கள்.அவரவர் தகுதிக்கேற்ற வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சப்தம் தான் படத்தின் மையக்கரு என்பதால், பின்னணி இசைக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் தமன்.

ஒளிப்பதிவாளர் அருண்பத்மநாபன் இப்படத்தின் திரைக்கதையை உணர்ந்து அதற்கேற்ற வண்ணங்கள் ஒளியமைப்புகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி காட்சிகளை இரசிக்க வைத்திருக்கிறார்.

ஏதோ புதுமையாக சொல்ல வருகிறோம் என்று அறிவழகன் முயற்சி செய்து சப்தம் படத்தில் சத்தத்தை அதிகமாகி நாம் காதை ரணமாக்கி, சப்தம் படத்தை சத்தம் இல்லாமல் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு நம்மை கொண்டுவந்துள்ளார்.

கதையை எங்கேயோ ஆரம்பித்து என்ன பண்ணுவது என்பது தெரியாமல் திரைக்கதையை லாஜிக் இல்லாமல் எழுதி அதற்கு ஒரு லாஜிக் சொல்லி நம்மை குழப்பி விடுகிறார்

சப்தம் – இரைச்சல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img