பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
வரும் மார்ச்-7ஆம் தேதி இந்த படம் தமிழகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டபோது படம் பார்த்த அனைவரும் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக பாசிட்டிவான விமர்சனங்களையே கூறினார்கள். ஆனாலும் இந்த வாரம் இன்னும் அதிக அளவில் சில படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ‘தியேட்டர் பகிர்வில் ‘அஸ்திரம் படத்திற்கு போதுமான அளவு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த படம் வெகுவான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை தந்திருக்கும் படக்குழுவினர், அதிக திரையரங்குகள் கிடைக்கும் விதமாக இன்னொரு நாளில் ‘அஸ்திரம்’ படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.