spot_img
HomeNewsUPBEAT பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ' சரண்டர் ' திரைப்படம்!

UPBEAT பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ சரண்டர் ‘ திரைப்படம்!

 

UPBEAT பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக சரண்டர் திரைப்படத்தை பெருமையுடன் வழங்க இருக்கிறது. கிரைம்-ஆக்ஷன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அவரது ஆதரவுக்கு படக்குழு சார்பாக மனமார்ந்த நன்றிகள்!

விக்டர் குமார் தயாரிப்பில் உருவாகும் சரண்டர், அருமையான திரையரங்க அனுபவம் கொடுக்கும் என பட குழு நம்பிக்கை கொடுக்கிறது. திரைக்கதை, இயக்கம் கௌதமன் கணபதி . இவர் பிரபல இயக்குநர் அறிவழகன் உடன் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். தற்போது சரண்டர் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார்.

போலீசாக தர்ஷன்

படத்தின் கதாநாயகனாக தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது தீவிரமான நடிப்பு, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது என இயக்குநர் பெருமிதத்துடன் கூறுகிறார்.
அதுமட்டுமல்ல, லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்காக, பிரபல இசையமைப்பாளர் விகாஸ் பதீசா தமிழில் முதல் முறையாக இசையமைக்கிறார். பிரபல இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீ பிரசாத் உட்பட பலருடன் பணியாற்றிய இவர், தனித்துவமான இசை அமைப்புகளுக்காக பாராட்டப்பட்டவர்.

தொழில்நுட்பக் குழு:
🎥 ஒளிப்பதிவு – மெய்யேந்திரன்
🎨 கலை இயக்கம் – ஆர்.கே. மனோஜ்குமார்
✂ எடிட்டிங் – ரேணுகோபால்
🔥 ஸ்டண்ட் இயக்கம் – ஆக்ஷன் சந்தோஷ்
படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது சரண்டர் திரைப்படம் போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான புதிய அனுபவத்தை வழங்கும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img