spot_img
HomeCinema Reviewஸ்வீட் ஹார்ட் - விமர்சனம்

ஸ்வீட் ஹார்ட் – விமர்சனம்

 

ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஸ்வீட் ஹார்ட்,

நாயகன் நாயகி இருவரும் காதலர்கள்.. கல்யாணத்திலும் குழந்தை விஷயத்திலும்  விருப்பமில்லாத நாயகன் செயல்பாடு, நாயகிக்கு கோபத்தை வர வைக்க பிரேக்கப் ஆகிறது.. பிரேக் அப்புக்கு பின் சில மாதங்களுக்குப் பிறகு காதலர்கள் இருவரும் செய்த சல்லாபத்தின் விளைவு நாயகி கர்ப்பம். கர்ப்பத்தை கலைப்பது எப்படி ? இதுவே கதையின் ஓட்டம். பிறகு நடப்பது என்ன ? பாருங்கள் ஸ்வீட் ஹார்ட்

கதையின் நாயகனான வாசு கதாபாத்திரத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரத்தை தெரிவு செய்து, அதில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய மென் சோகம் கலந்த கண்களும், பெண்மை கலந்த முகமும் சில உணர்வுகளை துல்லியமாக  வெளிப்படுத்த தவறுவதை அவதானிக்க முடிகிறது.

மனுவாக நடித்திருக்கும் மலையாள வரவு நடிகை கோபிகா ரமேஷ் அனைத்து விதமான உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.

நான் லீனியர் பாணியில் விவரிக்கப்பட்டிருக்கும் படத்தின் திரைக்கதை தொடக்கத்தில் ரசிகர்களுக்கு சோர்வை கொடுத்தாலும் செல்லச் செல்ல குறிப்பாக இரண்டாம் பாதியில் படத்தின் பலமாக மாறுகிறது. எழுதி இயக்கியிருக்கும் ஸ்வினீத் எஸ்.சுகுமார், காதல் மூலம் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை பேச முயற்சித்திருக்கிறார்.

படம் என்ன சொல்ல வருகிறது என்று பார்த்தால், கருத்தரிப்பது எப்படி ? கரு உருவாவது எப்படி ? கருக்கலைப்பது எப்படி ? குழந்தை பிறப்பது எப்படி ? இப்படி பல விஷயங்கள் நம் முன் வைக்கப்படுகின்றன. காதலின் மறு உருவம் காமம் தான் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது. படத்தில் ஒரு தாய் பாசம், தாய் துரோகம், ஒரு குழந்தை பாசம் இப்படி ஒரு “பிசிபேலாபாத் ” ஸ்வீட் ஹார்ட் ஆக வெளிவந்திருக்கிறது

 

இனிமையான இதயம் =குழந்தை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img