spot_img
HomeCinema Reviewசிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ; விமர்சனம்

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ; விமர்சனம்

 

தொழிலாளர்கள் பிரச்சனை என்பது நமது இந்தியா மற்றும் எளிமையான நாடுகளில் மட்டுமல்ல உலகத்திற்கே சிம்மா சொப்பனமாக இருக்கும் அமெரிக்காவில் கூட தாண்டவம் ஆடுகிறது என்பது இந்த சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் படம் நமக்கு சொல்ல வருகிறது

அமெரிக்காவுக்கு அருகே உள்ள மெக்சிகோவில் கிராமத்தில் ஃபுட்பால் கனவோடு இருக்கும் சிறுவனை ஏமாற்றி அமெரிக்காவுக்கு கொண்டு வந்து எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலையில் சேர்க்க அங்கு நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் சிறுவன் தப்பிக்க அவனை கண்டுபிடித்து துன்புறுத்த அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான் என்பதை கதை

சிறுவன் ஆரி போலஸ்.. இவன் தான் படத்தின் நாயகன். படம் முழுவதும் இவனுக்கு வசனம் இல்லை. கண்கள் மூலமே இவன் வசனத்தை பேசுகிறான். ஒரு முழு படத்தையும் இவன் தனி  ஒருவனாக கொண்டு செல்லுமாறு திரைக்கதை வடிவமைப்பு மிக அருமை. இந்தஆடை தயாரிக்கும் கம்பெனி செட் மிக அருமை.

அதிலும் கேமராவின் ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங் மிகவும் அருமை. கதைக்கு ஏற்றார்போல் டல் லைட் சாம்பல் நிற கலரிங் என மிக அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அதற்கேற்றார்போல் இசையமைப்பு சிறப்பு. சொர்க்கத்தின் வாசல் அமெரிக்கா என்று உலகில் உள்ளவர்கள் அனைவரும் நினைத்தாலும் இயக்குனர் ஒரு நரகத்தை நமக்கு காட்டியுள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் .

ரேட்டிங் ; 👍👍👍👏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img