சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், தயாரிப்பாளர், பாஜகவை சேர்ந்த நடிகர் கோபி காந்தி இயக்கியுள்ள “டொனேட்” படம் சிறந்த விழிப்புணர்வு படம், சிறந்த விழிப்புணர்வு பட இயக்குனர் 2025 பிரிவுகளின் கீழ் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் 2025 விருது பெற்றுள்ளது.
ஆர்.எஸ்.ஜி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பாக சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், பாஜகவை சேர்ந்த நடிகர் கோபி காந்தி தயாரித்து, இயக்கியுள்ள “டொனேட்” விழிப்புணர்வு படத்திற்கு சிறந்த விழிப்புணர்வு படம் மற்றும் சிறந்த விழிப்புணர்வு பட இயக்குனர் பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் 2025 விருது நோபல் சேவ ரத்ன சனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் பல்வேறு சாதனையாளர்கள் மத்தியில் “டொனேட்” விழிப்புணர்வு படம் திரையிடப்பட்டு நோபல் உலக சாதனை புத்தக பதிப்பாளர் முனைவர் தியாகு நாகராஜ் மற்றும் அதன் இயக்குநர் முனைவர் ஹேமலதா ஆகியோர்கள் இணைந்து “டொனேட்” படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் நடிகர் கோபி காந்திக்கு பாராட்டு தெரிவித்து சிறந்த விழிப்புணர்வு படம் 2025 மற்றும் சிறந்த விழிப்புணர்வு பட இயக்குனர் 2025 நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் 2025 விருதினை வழங்கினார்கள். இது குறித்து படத்தின் இயக்குனர் கோபி காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது. ஒரு வேளை உணவிற்காக கஷ்டப்படும் பிச்சைகாரன் தனக்கு உணவளிக்காத சமுதாயத்திற்கு தனது உடலையே தானமளிப்பதுதான் கதைக்களம் “டொனேட்” படத்தில் வாய்பேச முடியாத காது கேட்காத பிச்சைக்கார கூனன் கதாபத்திரத்தில் முனிதேவன் என்கிற புதுமுக நடிகரை அறிமுகப்படுத்தி உள்ளேன். மேலும் விஜய் முருகன், திவ்யா, எம்.ஆர்.எம், பிரதாப் சிங், ஜெ.கே, சி.எம், உள்ளிட்ட புதுமுக கலைஞர்களுடன் ஸ்ரீவாணிஸ்ரீ, சுஜித், கோகுல்ராஜ், மணிகண்டன் போன்ற குழந்தை நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளேன். அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள். ஒரு பிச்சைக்காரனுக்கும் பணக்கார குழந்தைக்கும் உள்ள உணர்வுபூர்வமான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மொழியினரும் பார்க்கும் வகையில் வசனம் இல்லாமல் காட்சி அமைப்பின் மூலமாக படத்தை உருவாக்கியுள்ளேன். ஒளிப்பதிவாளராக குமரன் ஜி, படத் தொகுப்பாளராக ராம்நாத், இசையமைப்பாளரக கோபால் கிருஷ்ணன் ஆகியோர்கள் பணிபுரிந்து உள்ளனர். மேலும் பல்வேறு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள். ஆஸ்கார் விருதுக்காக எடுக்க்கப்பட்ட இப்படத்திற்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் 2025 விருது கிடைத்திருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். பல்வேறு படங்கள் உருவாகி இருந்தாலும் சமூக அக்கறையை கருத்தில் கொண்டு “டொனேட்” விழிப்புணர்வு படத்தை தேர்வு செய்து பாராட்டி கெரவித்துள்ள நோபல் உலக சாதனை புத்தக பதிப்பாளர் முனைவர் தியாகு நாகராஜ் மற்றும் அதன் இயக்குநர் முனைவர் ஹேமலதா ஆகியோர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சமுதாயத்தில் பல்வேறு சேவை செய்யும் சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து சமூக மேம்பாட்டிற்கு பாடுபடும் உங்கள் பணி சிறக்க வேண்டும். மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் “டொனேட்” விழிப்புணர்வு படம் பங்கேற்க உள்ளது. இவ்வாறு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாஜகவை சேர்ந்த நடிகர் கோபி காந்தி கூறினார். இவ்விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையில் சாதனை புரிந்த சாதனையாளர்களும் பங்கேற்றனர்.