spot_img
HomeNewsரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து வரும் 'ஸ்வீட் ஹார்ட்' படக் குழு

ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படக் குழு

‘மாடர்ன் மாஸ்ட்ரோ ‘ யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள்.

உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக ‘ஸ்வீட் ஹார்ட்’ இருந்ததால்… ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை வழங்கி வருகிறார்கள். அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் வசீகரிக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவரப்பட்ட ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு வந்து தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

ரசிகர்களின் வரவேற்பினை கண்டு சந்தோஷமடைந்த படக் குழு, கடந்த 19 ஆம் தேதியன்று ஈரோடு – ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும், சேலம் – டி என் சி திரையரங்கத்திற்கும்,  கோவை – பிராட்வே திரையரங்கத்திற்கும்,  திருப்பூர் – ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும் நேரடியாக சென்று ரசிகர்களின் வரவேற்பினை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் படக் குழுவினரை நேரில் சந்தித்த ரசிகர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டு, படத்தைப் பற்றிய தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து படக்குழு இருபதாம் தேதியன்று மதுரை – வெற்றி திரையரங்கத்திற்கும், திருச்சி – எல்.ஏ சினிமாஸிற்கும் சென்று ரசிகர்களை சந்தித்தனர். இந்நிகழ்வுகளில் ரசிகர்கள் பலரும் கதையின் நாயகனான ரியோ ராஜையும், நாயகி கோபிகா ரமேஷையும் வெகுவாக பாராட்டினார்கள். அதிலும் ஒரு ரசிகை ரியோ ராஜை கண்கலங்க பாராட்டியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால்.. படக்குழு மகிழ்ச்சியடைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img