spot_img
HomeCinema Reviewட்ராமா ; விமர்சனம்

ட்ராமா ; விமர்சனம்

 

விவேக் பிரசன்னா, சாந்தினி, அஜய் குமார், மாரிமுத்து மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ட்ராமா. படம் என்ன சொல்ல வருகிறது.

விவேக் பிரசன்னா, சாந்தினி திருமணம் முடிந்து நான்கு வருடம் ஆகியும் குழந்தை வரம்  இல்லாமல் தவிக்கின்றனர். அதற்காக ஒரு தனியார் மருத்துவமனையை நாட அங்கு இவர்களுக்கு மருந்து மாத்திரை தரப்படுகிறது. அதன் பயனாக சாந்தினி கர்ப்பம் தரிக்க சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளம் நாயகிக்கு ஒரு காதல். காதலன் அன்பினால் அவள் வயிற்றில் கர்ப்பம் காதலனை தேடுகிறாள். காணவில்லை. தொலைக்காட்சியில் அவன் காதலன் கொலை செய்யப்பட்டதாக செய்தி வருகிறது. இந்த இரண்டு கதைகளையும் இணைக்கிறது.  கதையின் நாயகனாக பிரசன்னா, இவரின் நடிப்பை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம்.. ரசித்திருக்கிறோம்..

இந்த படத்தில் ஒரு தனித்துவமான மதிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் ஆண்மை இல்லாத விஷயத்தை மனைவியிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் கணவனாக தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் சாந்தினி. குறைந்த பட்ஜெட் படம் என்றால், அதில் கண்டிப்பாக சாந்தினியை நாம்  பார்க்கலாம். அவரை நாம் தயாரிப்பாளர் நாயகி என்றே கூறலாம்.. தான் கர்ப்பமாக வேண்டும் என்ற ஆதங்கம் ஒரு பக்கம், கர்ப்பம் தரித்தவுடன் அதற்குக் காரணம் தன் கணவன் இல்லை என்பது தெரிந்ததும் அதிர்ச்சி ஒரு பக்கம் என நடிப்பை சிறப்பாக வழங்கினாலும் நமக்கு ஏனோ ஏதோ குறை தெரிகிறது.

அது என்னவென்று, நமக்கே தெரியவில்லை. இயக்குனர் எடுத்த கதைக்களம் மிக அருமை. ஆனால் திரைக்கதையில், நிறைய லாஜிக் மீறல்கள் குற்றம் 23 என்ற படத்தில் செயற்கை முறையில் கருத்தரிக்கும்போது அந்த விந்தணுவின் சொந்தக்காரன் பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பான்.

ஆனால் இந்தப்படத்தில் குழந்தை வரம் வேண்டி மருத்துவமனைக்கு சென்று வந்தவுடன் என்னை கர்ப்பமாக வீட்டுக்கு வருகிறான். மயக்க மருந்து கொடுத்து கர்ப்பம் ஆக்கிவிடுகிறான். சினிமா என்பதால் இது சாத்தியம்.  படத்தின் இறுதிக் காட்சி ஒரு பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் சப் என்று முடிந்து விடுகிறது.

அதுவும் நாடகத்தனமாக படத்தின் பெயர் டிராமா என்பதால் அப்படி முடித்தார்களா என்பது நமக்கு தெரியவில்லை

 

டிராமாஇது ஒரு நாடகம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img