spot_img
HomeNews'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திறந்து வைத்த ‘மெட்ராஸ் பிட்னஸ்’ ஜிம்

இன்றைய சூழலில் ஆண்களும், பெண்களும் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி கூடங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் மெட்ராஸ் பிட்னஸ் எனும் பெயரிலான உடற்பயிற்சி கூடம் சென்னையின் மையப் பகுதியான ஆழ்வார்பேட்டையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திறந்து வைத்திருக்கிறார்.

‘பிக் பாஸ்’ புகழ் மணிகண்டன் ராஜேஷ் – ஃபிட்னஸ் கோச் ஹரி பிரசாத் மற்றும் கனி ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த ‘மெட்ராஸ் பிட்னஸ்’ எனும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கான நவீன கருவிகளும், புதிய பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவையை வழங்கும் இந்த உடற்பயிற்சி கூட திறப்பு விழா நிகழ்வில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் சுனில், வைபவ் , பப்லு பிருத்விராஜ், ஜெயச்சந்திரன் குழும உரிமையாளரும், தொழிலதிபருமான திரு. சுந்தர், பின்னணி பாடகர் ஏடிகே உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், தொழில் துறையினரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த உடற்பயிற்சி கூடத்தில் பெண்கள்/ ஆண்கள் என தனித்தனியாக உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள் உள்ளன. முதல் தளத்தில் கார்டியோ எக்யூப்மென்ட் மற்றும் இரண்டாவது தளத்தில் நவீன கருவிகளுடனான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை அனைத்திற்கும் முறையாக பயிற்சி அளிக்கும் பயிற்சியாளரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img