spot_img
HomeNewsதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்- FEFSI-யிடயே ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்- FEFSI-யிடயே ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு

சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் (FEFSI) இணைந்து தொழிலாளர்கள் மறு சீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் நிலுவையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சங்கங்களுக்கான தொழிலாளர் மறு சீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்துவது  என்று உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவின்படி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு ஆதரவு வழங்குகிறது.

மேற்படி  மறுசீரமைப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்  வருகிற மே 1-ஆம் தேதி 2025 முதல் அமலுக்கு வரும்.

நன்றி!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,

T.G.தியாகராஜன்
செயல் தலைவர்

T.சிவா
பொதுச் செயலாளர்

G.தனஞ்ஜெயன்
பொருளாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img