spot_img
HomeNews'குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிக்கும் 'பெடி ( PEDDI) 'படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கும் ‘பெடி ( PEDDI) ‘படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ்-  மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் –  ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ பெடி ( PEDDI) ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.‌

தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா ‘ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் 16 வது படமாக தயாராகும் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கும் இந்த கூட்டணி, வெள்ளித்திரையில் புயலை கிளப்ப தயாராக உள்ளனர். இந்த பான் இந்திய திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது‌. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட‌ சதீஷ் கிலாரு தயாரிக்கிறார்.

அசலான புயல் தாக்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் நேற்று இப்படத்தின் ஒரு ஃபிரீ லுக் போஸ்டரை வெளியிட்டனர். இது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதற்கு முன்னதாக பெரும் ஆர்வத்தை தூண்டியது. ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த படக்குழுவினர், இப்படத்தின் டைட்டிலை பெடி ( PEDDI) என்று வெளியிட்டுள்ளனர். இந்த தலைப்பு ராம்சரண் கதாபாத்திரத்தின் சக்தி மற்றும் ஈர்ப்பை மிகச் சரியாக உள்ளடக்கி இருக்கிறது. உண்மையிலேயே மகத்தான ஒன்றை இந்த டைட்டில் குறிக்கிறது.

பெடி ( PEDDI ) படத்திற்காக ராம் சரண் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்றம் பெற்றிருக்கிறார். ஒரு தீவிரமான மண் சார்ந்த-  அழுத்தமான கதாபாத்திரத்தை தழுவி இருக்கிறார் ராம் சரண். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்-  அவரை ஓர் கரடு முரடான அவதாரத்தில் வெளிப்படுத்துகிறது. துளையிடும் கண்கள் – கலைந்த கூந்தல் – சீர் படுத்தாத தாடி மற்றும் பிரத்யேக மூக்கு வளையத்துடன் அசைக்க முடியாத ஆதிக்கத்தினை அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. கரடு முரடான உடையில், ஒரு சுருட்டினை புகைக்கும் ராம் சரண் – மன்னிப்பு கேட்காமல் கடுமையான மற்றும் ஆழமாக வேரூன்றிய ஒரு கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறார். இதனுடன் இணைந்து வெளியிடப்பட்ட இரண்டாவது போஸ்டரில், அவர் ஒரு பழைய கிரிக்கெட் மட்டையை ஏந்தி இருப்பதை காண முடிகிறது. பின்னணியில் வெள்ளை விளக்குகளால் ஒளிரும் ஒரு கிராமப்புற அரங்கமும் இடம்‌பிடித்திருக்கிறது. இந்த போஸ்டர்கள் படத்தின் பின்னணி மற்றும் கதை பற்றிய ஆர்வத்தை தூண்டி உள்ளன. இது கிராமப்புற தீவிரம் மற்றும் அழுத்தமான நாடகத்தின் கலவையை குறிக்கிறது.

ராம் சரணின் கதாபாத்திரத்தை இயக்குநர் புச்சிபாபு கவனமாக அணுகி இருப்பது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெளிவாக தெரிகிறது. ஆழ்ந்த கவனம் செலுத்தி ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த போஸ்டர் பல்வேறு அடுக்குகளுடன் கூடிய ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை உறுதி செய்கிறது. தனித்துவமான ஒன்றை வடிவமைப்பதில் புச்சிபாபுவின் அர்ப்பணிப்பையும், கதாபாத்திரத்திற்கு நம்பகத் தன்மையை வழங்குகிறது. அத்துடன் ராம்சரணின் அர்ப்பணிப்பையும் காட்சிப்படுத்துகிறது.

பெடி( PEDDI)  இதற்கு முன் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான பட்ஜெட் – அதிநவீன தொழில்நுட்பம் – வியக்க வைக்க கூடிய காட்சி அமைப்புகள் – உலக தரம் வாய்ந்த தயாரிப்பு மதிப்பு-  என பிரம்மாண்டமாக உருவாகிறது. இவை ரசிகர்களையும் , தொழில்துறையினரையும் பேச வைத்திருக்கிறது. அத்துடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் ஒரு அனுபவத்தை வழங்கவும் தயாராக உள்ளது.

இந்த படத்தில் பல்வேறு திரைப்பட துறைகளை சார்ந்த மிகவும் பாராட்டப்பட்ட விரும்பப்படும் நடிகர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது.  இந்த திரைப்படத்தில் ‘குளோபல் ஸ்டார் ‘ராம் சரணுடன் கன்னட மெகா ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ,ஜெகபதி பாபு ,திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்திருக்கிறார்கள். ஆஸ்கார் விருதினை வென்ற ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அதனால் இப்படத்தின் இசை – மறக்க முடியாத இசை தொகுப்பை வழங்கும் என்பதை உறுதி செய்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருதினை பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார். இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லாவும்  இணைந்திருக்கிறார்.

பெடி ( PEDDI) பற்றிய பரபரப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் – படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. தேசிய விருது பெற்ற திறமையான கலைஞர்களின் குழு படத்தின் பின்னணியில் இருப்பதால் பெடி ( PEDDI) ஒரு மகத்தான படைப்பாக இருக்கும்.

நடிகர்கள் : ராம்சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார் ,ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : புச்சி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம் : விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாரு
இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஆர் . ரத்னவேலு ISC
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு : நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர் : வி ஒய் பிரவீண் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img