spot_img
HomeNewsஜி.வி. பிரகாஷ் குமாரின் 'பிளாக்மெயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

 

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறனுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்காக நடிகர்கள் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், முதல் பார்வைக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பிற்காக பத்திரிகை ஊடகங்கள் மற்றும் ரசிகர்ளுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

மர்ம பின்னணியில் ஜி.வி. பிரகாஷ்குமார் இருக்கும்படியான முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படம் மே 2025 இல் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப குழு:

இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: கோகுல் பெனோய்,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை: எஸ்.ஜே. ராம்,
ஆடை வடிவமைப்பு: ஆர். திலகப்ரியா சண்முகம் மற்றும் வினோத் சுந்தர், ஸ்டண்ட் மாஸ்டர்: ராஜசேகர்,
ஒப்பனை: சசிகுமார் பரசிவம், தயாரிப்பு வடிவம் அமைப்பாளர்: தயாளன் பழனி,
தயாரிப்பு நிர்வாகி: ஆர்.இ. ராஜேந்திரன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்,
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: அமுதன் பிரியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img