மே 30, 2025! அன்று திரையரங்குகளில் வெளியாகும்
கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் – படத்தின் புதிய ட்ரெய்லர் Martial Arts ன் பழைய மரபையும் நினைவுகளையும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது.
தமிழ் ட்ரெய்லர்
நாட்டில் மிகவும் பிரபலமான திரைப்படத் தொடரான கராத்தே கிட், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் தனது புதிய பகுதியுடன் திரும்பியுள்ளது – கராத்தே கிட்: லெஜென்ட்ஸ். மரபு நிறைந்த கராத்தே பயிற்சி, சீடர்-குரு உறவு, மற்றும் போட்டிகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் இந்தப் படத்தில், ஜாக்கி சான் மற்றும் ரால்ஃப் மெக்கியோ மீண்டும் இணைந்துள்ளனர். புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் கராத்தே மற்றும் குங்பூவின் அதிரடியான காட்சிகளைப அதிகப்படியாக பார்த்து ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர், முந்தைய திரைப்படங்களின் மரபுகளுக்கும், திரை உலகின் மகத்தான வழிகாட்டியான மிஸ்டர் மியாகி அவர்களுக்கும் மரியாதை செலுத்துகிறது. மேலும், டேனியல் லாருசோ மற்றும் மிஸ்டர் ஹான் இணைந்து புதிய கராத்தே கிட் ‘பென் வாங்’ என்பவருக்கு பயிற்சி அளிக்கின்றனர். இந்த ஆறாவது பாகம், நீண்ட காலமாகச் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் இந்த Martial Arts திரைப்படத் தொடரின் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களை ஒன்றாகக் கொண்டுவரும் முதலாவது படம் என்பது கூடுதல் சிறப்பு!
கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் – உலகளவில் பிரபலமான இந்த Martial Arts திரைப்பட தொடரின் பிரபல கலைஞர்களை ஒன்றிணைத்து, இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய கதையை, அதிரடி மற்றும் உணர்வுபூர்வமான முறையில் எடுத்துக்காட்டுகிறது. குங்பூ மேதை லி ஃபாங் (பென் வாங்) தனது தாயுடன் நியூயார்க் நகருக்கு புதிய பள்ளியில் சேருவதற்காக குடிபெயர்கிறார். அங்கு அவர் ஒரு சக்திவாய்ந்த நட்பினைப் பெறுகிறார், ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு கராத்தே சம்பியனின் கவனத்தை ஈர்க்கிறார். தன்னை பாதுகாக்கும் நோக்கத்தில், அவன் இறுதிப் போட்டியில் பங்கேற்க பயணமாகிறார். இத்தகைய கஷ்டநிலைமைக்கு எதிராக அவனுக்கு வழிகாட்டுபவர்கள் குங்பூ ஆசான் மிஸ்டர் ஹான் (ஜாக்கி சான்) மற்றும் மறுவடிவில் திரும்பிய கராத்தே கிட், டேனியல் லாருசோ (ரால்ஃப் மெக்கியோ). இவர்கள் இருவரின் பாணிகளை இணைத்து, லி ஃபாங் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய மோதலுக்குத் தயாராகிறார்.
ஜொனத்தன் என்ட்விஸ்டில் இயக்கும் கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் படத்தில் ஜாக்கி சான், ரால்ஃப் மெக்கியோ, பென் வாங், ஜோஷுவா ஜாக்சன், சாடி ஸ்டான்லி, மற்றும் மிங்-நா வென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா, மே 30, 2025, அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் படத்தை வெளியிடுகிறது!