spot_img
HomeCinema Reviewடெஸ்ட் - விமர்சனம்

டெஸ்ட் – விமர்சனம்

 

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் என்ற பிரபலங்களுடன் மற்றும் பிரபலங்களும் கலந்து நடித்து வெளிவந்திருக்கும் படம் டெஸ்ட் இது ஒரு netflix படம்.

பள்ளிக்கூடத்தில் டீச்சராக வேலை செய்யும் நயன்தாராவின் கணவன் மாதவன். அமெரிக்காவில் படித்து வந்தாலும் வேலை வெட்டி இல்லாமல் நாட்டின் பெட்ரோல் பிரச்சனையை சமாளிக்க தண்ணீரில் இயங்கும் மோட்டாரை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாலும் அதை அங்கீகரிக்கும் முயற்சிக்கு 5 கோடி தேவைப்படுகிறது. நயன்தாராவுக்கு டெஸ்ட் டியூப்  மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அஞ்சு லட்சம் தேவைப்படுகிறது.

இது ஒரு புறம் இந்திய கிரிக்கெட் டீமில் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்த சித்தார்த் கடந்த சில மேட்ச்களில் சரிவர தன் திறமையை காட்டாததால் சென்னையில் நடைபெறும் டெஸ்ட் மேட்ச்க்கு அவரை செலக்ட் செய்வதில் குழப்பம் இருக்க தன் சகுனித்தனத்தால் இந்திய டீமில் இடம்பெறுகிறார்.

இது ஒரு புறம் மேட்ச் பிக்சிங் நடத்தும் தாதாக்கள் மத்தியில் மாதவன் 50 லட்சம் கடன் வாங்கியிருக்க அதைக் கட்ட முடியாமல் தவிக்கும் சமயத்தில் மேட்ச் பிக்சிங் நடத்தும் கும்பல், சித்தார்த்தை அணுக அவர் முடியாது என்று சொல்ல சித்தார்த்தின் குழந்தையை கடத்தி மாதவன் சித்தார்த்திடம் தான் சொல்லும் படி தான் மேட்சில் ஆட வேண்டும் என்று மிரட்ட மாதவனுக்கு தேவையான பணம் கிடைக்கிறது. கடன்கள் தீர்க்கப்படுகிறது. அவர் லட்சியம் நிறைவேறும் சமயத்தில் முக்கிய பிரச்சனை ஒன்று ஆரம்பிக்கிறது. அது என்ன பாருங்கள் netflixல் டெஸ்ட் படம் பாருங்கள்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு மாதவனுக்கு ஒரு சிறந்த ஓபனிங்.. அவரின் நடிப்பை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்த படத்தில் அவரின் இயலாமை, தன் கண்டுபிடிப்பை அங்கீகரிக்க அவர் படும் கஷ்டங்கள், வாங்கிய கடனை அடைக்க அவர் படும் வேதனைகள், மனைவியின் டெஸ்ட் டியூப் குழந்தைக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் தவிக்கும் கணவனாக மிக அழகாக தன் பங்களிப்பை வழங்கி இருக்கிறார். என் கண்டுபிடிப்பினால் இந்தியா உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்கப் போகிறது. அதற்கான முயற்சியில் நான் ஜெயித்தாலும் அதை அங்கீகரிக்க முடியாத இந்தியா, ஆனால் மட்டையை பிடித்து பாலடிக்கும் விளையாட்டுக்கு 40 ஆயிரம் கோடி செலவு என்று அவர் ஏக்கத்தின் வசனம் ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்ள வேண்டும்.

நயன்தாரா மூக்குத்தி அம்மன் படம் வெற்றி பெற்றதால் என்னவோ இந்த படத்தில் மூக்குத்தி அணிந்து கொண்டே இருக்கிறார். பள்ளிக்கூடத்தின் ஆசிரியை மாணவர்களுக்கு ஒரு தாயைப் போல.. அதனால் பள்ளியில் பல சஸ்பெண்டுகளை பெற்று வலம் வரும்  நயன்தாராவுக்கு, தான் ஒரு அனாதை என்பதால் தனக்கு ஒரு தாய் இல்லை என்பதால், தான் தாயாக ஆவதற்கு படும் கஷ்டங்கள், ஒரு நடுத்தர குடும்பத்தின் வெளிப்பாடு, இறுதிக்காட்சியில் மாதவன் கேள்வி க்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நயன்தாரா ஒரு சராசரி பெண்ணாக தெரிகிறார்,

சித்தார்த் கிரிக்கெட்டே இவரின் உலகம். உலகமே இவரின் கிரிக்கெட். டீமில் இவர் இடம் பிடிக்க முடியாமல் போவதால் அவர் செய்யும் சகுனித்தனம் மற்ற கிரிக்கெட் பிளேயர்களின் விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. இந்த கிரிக்கெட் மேட்ச் தனது கடைசி மேட்ச்.. அதனால் தான் பெயர் வாங்க வேண்டும் சதத்தை அடிக்க வேண்டும் என்று வெளியில் இருக்கும்போது மகனைக் கடத்தி வைத்துக் கொண்டு தோற்றுப் போ என்றால் அவரின் நிலைமை எப்படி இருக்கும்.. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.. அவர் மனைவியாக மீரா ஜாஸ்மின் கதாபாத்திரம் சிறிதாக இருந்தாலும் நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் மீரா ஜாஸ்மின்.

மிகுந்த பொருட்செலவில் நெட்பிலிக்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் பிரம்மாண்டம் தெரிகிறது. நட்சத்திர அணிவகுப்பு தெரிகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று குறைவதாக நமக்கு தோன்றுகிறது. அது என்ன என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் படத்தில் பிற்பகுதி மிகவும் மெதுவாக சோகமாக நடிகைகளின் இயலாமையை வெளிப்படுத்தும் படமாக நமக்கு தெரிகிறது.

டெஸ்ட்- இதை ஒர்ஸ்ட்என்று ஒதுக்கவும் முடியாது.. பெஸ்ட் என்று பாராட்டவும் முடியாது..

போக்கஸ் ஒன் டிவிக்காக

கே உசேன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img