spot_img
HomeNewsஅல்லு அர்ஜுன் - அட்லி - சன் பிக்சர்ஸ் - கூட்டணியில் உருவாகும் பான் இந்திய...

அல்லு அர்ஜுன் – அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய சினிமா

‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள  புதிய படத்தைப் பற்றிய ‘#AA22xA6’ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை தந்து, இந்தி சினிமாவில் ‘ஜவான்’ படத்தின் மூலம் 1100 கோடி வசூலை சாதித்துக் காட்டி, சர்வதேச திரையுலகினரின் கவனத்தைக் கவர்ந்த இயக்குநராக உயர்ந்திருக்கும் அட்லி இயக்கத்தில், அவரது ஆறாவது படைப்பாக,  ‘புஷ்பா’ படத்தின் மூலம் இந்திய சினிமாவின் வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்திருக்கும் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடிப்பில்,  கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக தயாராகும், இந்தப் பெயரிடப்படாத ‘#AA22xA6’ புதிய திரைப்படத்தைப் பற்றிய, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய சினிமாவின் முத்தான மூன்று பிரம்மாண்டங்களும் ஒன்றிணையும் இந்த திரைப்படம் – இந்தியாவில் தயாராகும் சர்வதேச தரத்துடனான உலக சினிமாவாக  இருக்கும்.

உலகத்தரத்தில் பான்வேர்ல்ட் படைப்பாக உருவாகும் இப்படத்தில், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளது. ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லியின் #AA22xA6 வது படமாக  உருவாகும் இந்த புதிய படம் இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல்,  சர்வதேச அளவிலான திரைத்துறையில் புதிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img