spot_img
HomeNewsபிரித்திவிராஜின் #NOBODY படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

பிரித்திவிராஜின் #NOBODY படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

முன்னணி நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில்,  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  #NOBODY திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள அழகிய வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இனிதே துவங்கியது.

பிரம்மாண்டமாக உருவாகும்  #NOBODY திரைப்படத்தினை சமீர் அப்துல் எழுதியுள்ளார்.  புகழ்பெற்ற முன்னணி படைப்பாளி நிசாம் பஷீர் இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில், அற்புதமான நடிகர்களின் நடிப்பில், அழகான திரை அனுபவமாக உருவாகிறது.

இப்படத்தை பிருத்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா மற்றும் சி.வி. சாரதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

அனிமல் திரைப்படத்தில் அட்டகாசமாக  இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முன்னனி தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் #NOBODY ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.

படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img