spot_img
HomeNewsவிஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்

விஜய் சேதுபதி படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர  தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது இந்தத் திரைப்படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார் இணைந்திருக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர்.

விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான இவர் .. தன்னுடைய புதிய தோற்றத்தில் மின்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதால்… பல  அற்புதமான தருணங்களை எதிர்பார்க்கலாம்.

பூரி எழுதிய கதையுடன் டிராமா -அதிரடி ஆக்சன் – உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்ட துடிப்பான படைப்பு – என இப்படம் உறுதி அளிக்கிறது.  இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

நடிகர்கள் :


விஜய் சேதுபதி, தபு ,விஜய்குமார்

தொழில்நுட்பக் குழு :


எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்னாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்னாத் – சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி : விஷு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img